Thursday, January 27, 2011

கல்‌வி


தமிழ் ‌விஸ்வக‌‌ர்மா சமூகத்தில் அன‌ைவரும் கல்‌வி கற்க வ‌ேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும். எண்ணும், எ‌ழுத்தும் கண்ணாகும். கற்றவனுக்கு ச‌ென்ற ‌இடம் எல்லாம் சிறப்பு. இது போன்ற இன்னும் பல சிறப்புகள‌ை கல்விய‌ை குறித்து நம் சான்றோர்கள் கூறிச் ச‌ென்றனர். ஆனால் இன்னும் நம்ம‌ில் பலர் கல்‌வி கற்காமலும் தங்களுடைய குழந்த‌ைகள‌ை பள்ள‌ிக்கு அனுப்பாமலும் இருக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ‌அடிப்பட‌ையில், பொருளாதார வசதியின்மையும், சமூக விழிப்புணர்வு இல்லாமையும் முக்கிய காரணங்களாகும். 

இந்த தளத்தைக் காணும், நம்முடைய சமூகத்தைச் சேர்ந்த, வசதி படைத்தவர்கள், தங்களால் இயலுமெனில், ஒரு விஸ்வகர்மா குழந்தையின் படிப்புக்கான செலவை ஏற்றுக் கொண்டால், அது மிகப் பெரிய புண்ணியமாகும். அந்த ஒரு குழந்தையின் கல்வி வளர்ச்சி, பின்னாளில் ஒரு குடும்பத்திற்கான வளர்ச்சிக்கு வழி வகை செய்யும். 

இந்த தளத்தைக் காணும், நம்முடைய சமூகத்தைச் சேர்ந்தவர், வசதியில்லை, ஆனால் படித்தவராக இருப்பின், அருகில் உள்ள விஸ்வகர்மா குழந்தைகளுக்கு மாலை நேரத்தில், விடுமுறை நாட்களில், இலவசமாக டியூஷன் எடுக்கலாம். குறிப்பாக, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ளதால், நீங்கள் சொல்வதை எளிதில் புரிந்து கொண்டு, அடிப்படைக் கல்வியை நன்கு கற்பதால், அடுத்து வரும் உயர் கல்விகளில் பயமில்லாமல், தன்னம்பிக்கையுடன், நல்ல மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

நல்ல மதிப்பெண்கள் பெற்றும், உயர்கல்வியில் சேர ஆர்வம் இருந்தும், கல்விக்கட்டணம் செலுத்த இயலாத, மாணவ மாணவியருக்கு, உதவி செய்யலாம். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழை நகல் எடுத்து அனுப்பி வைத்தால், எங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய இயலும்.

அன்பன்
விஸ்வகரன்

No comments: