Sunday, July 17, 2011

வேலை வாய்ப்பு - பேக்கரி

தமிழ் விஸ்வகர்மா அன்பர்களே !

வெளிநாட்டில் (துபாய் - யு.ஏ.இ. ) பேக்கரி வேலை செய்ய ஆர்வம் உள்ளவர்கள் மின் அஞ்சல் செய்து, விண்ணப்பிக்கலாம். பின்வரும் பணிகளில் அனுபவம் உள்ளவர்கள், கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு தங்களின் விவரங்களை ஆங்கிலத்தில் அனுப்பவும.

Please find the below vacancy at Golden Loaf Est, Only experienced candidates in the same may forward their CV’s to john@goldenloafuae.com and mark a copy to joblinkss@gmail.com .


Kindly mention the subject - the position you are applying for:


· Bakery Production supervisors
· Bakery Experienced workers

 மெயில் அனுப்ப வேண்டிய முகவரி:  john@goldenloafuae.com


குறிப்பு :

இது ஒரு தகவலேயன்றி மற்றபடி இது தொடர்பான எந்த விஷயத்திற்கும்  நாங்கள் பொறுப்பல்ல.

விஸ்வகரன் 


ஜோதிடம் கற்க


Tuesday, July 12, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 2

           பொதுவாக நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொல் “சொந்தக்காரங்க ..”. இந்த சொந்தக்காரங்க யார்? இவர்களுக்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு நாம் முதலில் விடை காண வேண்டும். இந்த வலைப்பூவைத் தொடங்கி ஏறக் குறைய பல மாதங்கள் ஆகிறது. இந்த பல மாத காலத்தில், ஜாதிப் பெருமையை, பழங்கதைகளை எழுதி எல்லோருடைய நேரத்தையும் வீணடிக்காமல், ஆக்கப் பூர்வமாய் ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதியே இதுவரை பழங்கதைகளை எழுதவில்லை. ஆனால் வருங்கால சந்ததியினருக்கு நம்முடைய சோகக் கதை தெரியாமல் போய்விடும் என்று கருதியே, இப்பதிவை எழுத நேர்ந்தது.

முதலில் விஸ்வகர்மா என்றால் யார் என்று பார்ப்போம்?

ரிக் வேதத்தில் பல இடங்களில் விஸ்கர்மாவைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ரிக் வேதம் 10.81, 10.82 போன்ற ஸ்லோகங்களில் விஸ்வகர்மாப் பற்றிய விஷயங்கள் உள்ளன.

(1) முழு உலகத்தையும் வடிவமைத்த தேவ சிற்பி விஸ்வகர்மா.


(2) உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும் சக்தியாகவும், உலகத் தந்தையாகவும் விளங்குபவர் தனது அனைத்துப் புறங்களிலும் விழிகளையும், வதனங்களையும், புஜங்களையும், பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா காவியங்கள் “கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி, மிகவும் முதல்தரமான, மேம்பட்ட, தலைமையான தொழில் நிபுணர், அணிகலன்களில் புதுமைகளைப் புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற நிலையான இறைவன்.” என்று விராட் விஸ்வ ரூபத்தைப் புகழ்கின்றன.


(3) தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாகனங்களையும், ஆயுதங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்த என்ஜீனியர் ஆவார்.


விஸ்வகர்மாவின் பரம்பரை

விஸ்வகர்மாவின் புதல்வராக ஐவரை, வாயு புராணம் நான்காம் அத்தியாத்தில் கூறப்பட்டுள்ளது.

1) மனு :
விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரிபாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி சாஸ்திரம் என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார். ஆங்கிலச் சொற்கள் Man, Human, Woman போன்றவைகளுக்கு இவரே காரணகர்த்தா என்பது சிந்தனைக்குரியதே ! ஆங்கிலத்தை இங்கிலீஷ் என்று கூறினாலும், பல உலக மொழிகளில் இன்றும் ஆங்கிரஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்.

2) மயன் :
விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி. பராசர முனிவர் ஜோதிட சாஸ்திரம் எழுதியவர்.
3) த்வஷ்டா:
விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.

4) சில்பி :        
                      ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.


5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :
ஜெய்மினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி.ஜெய்மினி முனிவர் ஜெய்மினி சூத்திரம் என்ற ஜோதிட சாஸ்திர நூலை எழுதியவர்.


விஸ்வகர்மாவின் கோத்திரங்கள்
 
1) மனுவின் வழித்தோன்றல்கள் 

(இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்

2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்

3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்

4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்

5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்


இனி கோத்திரம் என்ன என்று கேட்டால் தைரியமாக சொல்லலாம். பிராமணர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சொல்லித் தருகிறார்கள். பிராமணர்களைப் போன்று நமக்கும் எல்லாம் இருக்கிறது என்று கூறவே இந்த தகவல், பின்பற்றுவது தங்கள் விருப்பம்.


அன்பன்
விஸ்வகரன்

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 

Wednesday, July 6, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 1

சாதி பெயரை சொல்லி, எவர் ஒருவரும், சுரண்ட நினைத்தாலோ, சுய நல அரசியல் செய்ய நினைத்தாலோ அது தவறாகும். சேவை செய்ய நினைப்பதில் தவறேதுமில்லை. விமானத்தில் பயணம் செய்யும் பொழுது விபத்து நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று பாதுகாப்பு குறித்து விளக்கம் தருவார்கள். அதில் முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு பிறகு தான் உங்களின் குழந்தைகளை நோக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் பெரியவர்கள் விரைந்து செயல்பட்டால், அவர்களும், அவர்களால் குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள். இதில் எங்கே வந்தது சுய நலம். புத்திசாலித்தனமே உள்ளது, சுய நலம் இல்லை. நெருடல் தேவையில்லை. அதைப்போலவே முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், பிறகு உங்கள் உறவினர்களை பாதுகாக்கவும், உறவினர்கள் என்று வரும்போது ஜாதி வந்துவிடுகிறது. அதன் பின் தாங்கள் சார்ந்த தாய் மொழியினருக்காக ஏதாவது செய்ய இயலுமா என்று பார்க்கவும், பிறகு ஒட்டு மொத்த இந்தியாவுக்காக தாங்கள் ஏதாவது செய்ய இயலுமா என்று முயற்சிக்கலாம். இது ஜாதிக்கு மட்டுமல்ல மதத்திற்கும் பொருந்தும். முதலில் வினாயகர், முருகன், சிவன் முதலிய கடவுளர்க்கு பல வழிபாட்டு பாடல்களைப் பாடிய அருட்பிரகாச வள்ளலார் பிறகு, ஜாதி மதத்தை கடந்து, சமரச சன்மார்க்க நெறியை பரப்ப விழைந்தார். அருட்பெரும் ஜோதியை வழிபட சொல்லி திருவருட்பா அருளினார். இதனை சமயாதீத நிலை என்று கூறுவர். தாயுமானவர் நிலையும் சமயாதீத நிலைதான். ஜாதி, சமயம், சமயாதீதம் என்பது தான் வரிசைக்கிரமம். அதனால் தங்களுக்கு ஏற்பட்ட நெருடல் அவசியம் இல்லாத ஒன்று என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. 

வரப்புயர நெல் உயரும் ! 
நெல் உயர குடி உயரும் ! 
குடி உயர கோன் உயர்வான் ! 
----என்பது ஆன்றோர் வாக்கல்லவா?

மேலும் சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்று தேவநேயப் பாவனர், மறைமலை அடிகளார் போன்ற தனித்தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகப்பொதுமறையாம், தமிழ்த் திருமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் வள்ளுவனே முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்று கூறியுள்ளார்.  இதில் வரும் உலகு என்ற சொல்லானது லோகம் என்ற வட மொழிச்சொல்லின் மரூஉ என்றும், ஆதி, பகவன் என்ற சொற்களும் வட மொழி சொற்களே என்றும் சமஸ்கிருத ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தமிழறிஞர்கள் மறுத்துவருகின்றனர்.  சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்பது அவர்களின் நிலைப்பாடு. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் அகத்தியரின் பிரதம சீடர் ஆவார். தமிழில் அகத்தியர் எழுதிய அகத்தியத்தின், தொடர் நூலே தொல்காப்பியம் என்றும் கூறுவர். இதே அகத்தியர் சமஸ்கிருதத்திற்கும் இலக்கண நூல் எழுதியுள்ளார். 

நான் ஏன் தமிழ் விஸ்கர்மா என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்தேன் என்பதை அறிமுகப் பதிவிலேயே சொல்லியிருப்பேன். தமிழ்மொழியை ஒரு தகவல் பறிமாற்ற உறவுப்பாலமாகவே கருதுகிறேன். வேறு எந்த நோக்கமுமல்ல.

விஸ்கர்மா என்ற சொல் 5 தொழிலுக்கும் பொருந்தும். கொல்லன், தச்சன் என்று பிரிக்கவேண்டாம் என்ற உயர்ந்த நோக்கமும் அதில் அடங்கியுள்ளது. அதனால் நண்பரே வீண் வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நம்முடைய சமூகத்திற்கு தங்களால் இயன்ற சேவையை செய்யுமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க