Monday, October 31, 2011

நமது குலத்தவரின், குலத்தொழில்களின் நசிவு

உலகுக்கு கலையை அறிமுகம் செய்த உத்தம கலைஞர்கள் நம் விஸ்வகுலத்தினர். ஆனால் இன்றைய சமுதாயத்தில் நம் குலத்தவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏராளம். நம் குலத்தவர் அறிந்து பாடவேண்டிய கீழ்க்காணும் குலக்கீர்த்தியை நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளனர்.?

"பஞ்சவர்ணம் கொஞ்சுமுகம் ஐந்து பேர்கள்
பரமனுடைய திருக்கண்ணில் உதயமானார்.
கொஞ்சிவரும் கிளிமொழியாள் உமையாள் புத்திரர்
குருவான மனு, மயா, த்வஸ்ட்டா, சிற்பி, விஸ்வஞ்ஞா என்னும்
விஞ்சையுடன் தேவர்களுக்கும் தொழில் வகுத்து
விஸ்வகர்மாவென்னும் நாமம் பெற்று
தஞ்சமுடன் இவர்கள் ஐந்து பேர்களையும்
சகலகலை குருவென்று சாற்றினார் காண்"

உலகின் கலைகளனைத்துக்கும் குருவாக விஸ்வகர்மாவை அமைத்து, நம் மக்களை உலகின் முன்னோடியாக படைத்தான் இறைவன். ஆனால் தன்னிலை அறியாது இன்றைக்குக் கீழ்நோக்கிப் போய்விட்ட நம்மவர்களின் நிலைக்குக் காரணம் யார்? சத்தியமாக நாமேதான். நம்மிடையே அற்றுப்போன ஒற்றுமை, தனிமனித ஒழுக்க நிலை போன்றவைதான் முதன்மையான காரணம்.

முக்காலத்தில் தமிழகத்துக் கம்மாளர்கள் கலைகளின் முன்னோடியாக விளங்கினார்கள். மிகச்சிறந்த கலைநுட்பமும், பேராற்றலும் படைத்து, கட்டிடக்கலையில் மிகச்சிறந்து விளங்கினார்கள். இவர்களுக்கு போர்ப்பயிற்சி இல்லை.  ஆனாலும் தம் சமுதாயத்தவரின் பாதுகாப்பிற்காக 
சிறந்த அரண்களை அமைத்துத் தம்மைக் காத்துக் கொண்டிருந்தனர்.  இச்சமயத்தில்தான் முஸ்லீம்களின் படையெடுப்பு நடந்தது. என்ன முயற்சி செய்தும் முஸ்லீம்களால் நம்மவர்களை நெருங்க இயலவில்லை. இவர்களின் கலைத்திறனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இயலவில்லை. அச்சமயத்தில் அவர்கள் தொடுத்த சில பாணங்களால், நம்மவர்களில் சிலர் கோடாரிக்காம்பாகிப் போனார்கள். ஆனால் அதற்கு முன்னரே மிகச்சிறந்த கட்டடங்களை, அறிவுநுட்பத்துடன் படைத்து உலகுக்களித்த முன்னோடிகள் நம் கம்மாளர்கள். இது போன்ற சேர்க்கைகளால்தான் இன்றைக்கும் தமிழகத்துக் கம்மாளர்கள், முஸ்லீம்களுடனான உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லீம்களுக்கும், நமக்குமான உறவுமுறை நாம் அறிந்ததே...

நம்மவர்களை சீர்ப்படுத்தி சுய ஒழுக்கத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது படித்த நம் அனைவரின் தலையாய கடமை.  அமாவாசை நாளில் நம்மவர்கள் ஐந்தொழில்களுக்கும் விடுமுறை அளித்திட வேண்டும் என்பது விதி.  மீறி செய்ய வேண்டுமென்றால் கத்தரிக்காயை உண்டு பின்னர் செய்ய வேண்டும். ஆனால் நாம் இதைக் கடைபிடிப்பதில்லை.
 முன்னோர்கள் வகுத்த விதிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டியது நமது கடமை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மீனவர்களுக்கு பணியில்லாத நாட்களில் வருமானம் இவை போன்று பிற சமுதாயத்தவர்க்குக் கிடைக்கும் சலுகைகள் நம்மவர்களுக்கு அரசாங்கத்தால் கிடைப்பதில்லை.. தேர்தல் நேரங்களில் நம்மை நெருங்கிவரும் அரசியல்வாதிகள், பிற நேரங்களில் காணாமல் போவது வாடிக்கையாகி விட்ட சூழ்நிலையில், நாம் நமக்கென்று சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அரசியலிலும் அங்கம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.  இதற்கு நம்மவர்களை நாம்தான் தயார் செய்தாக வேண்டும்.

எங்கு நோக்கினும் வியாபார சிந்தனை கொண்டோர்கள் நம்மவர்களை நசித்துக் கொண்டிருப்பதைத்தான் நாம் காண்கின்றோம். தங்க நகைகளை மிகச்சிறந்த நுட்பத்துடன் செய்து தரும் தட்டானை விட, அதை வியாபாரம் செய்யும் வியாபாரிக்குக் கிடைக்கும் வருமானம் அதிகம். 
ஆகவே நாம் முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். 
இனிமேல் நமக்குத் தேவையான நகைகளை, நம்மவர்களிடம்
மட்டுமே செய்து தரச்சொல்லி வாங்கி அவர்களுக்கேற்ற வருமான வாய்ப்பைத் தர
வேண்டும்.

நம்மவர்களும், செய்யும் தொழிலை தெய்வமெனக் கொண்டு செய்து பழக வேண்டும். நமது தொழில் மூலம் பிறரை ஏமாற்றி வஞ்சிப்பது போன்ற காரியங்களை எந்த நிலையிலும் செய்திடக் கூடாது.
மாற்று சமுதாயத்தினரும் நம் தொழிலைக் கற்று நமக்குப் போட்டியாக வந்தது நமக்குப் பெரும் பின்னடைவுதான். ஆயினும், பிறப்பால் கம்மாளனான நம் தொழில் அறிவுக்கு இணையாக அவர்களின் நுட்பம் இருக்காது என்பதே உண்மை. 

நம் சமுதாயம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்றதாக மாற வேண்டும். அந்த நிலை வரும்போதுதான் நமது சமுதாயத்தவரின் தொழில் நுட்பத்தோடு, வணிக அறிவும் சேர்ந்து நமது பொருளாதார நிலை உயரும்.
தனது சுயநலனைக் கருதாது, நமது சமுதாயத்தவரின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுப்போரை நாம் ஆதரிக்க வேண்டும். "இளவயதில் இவனுக்கெதற்கு வேண்டாத வேலை? இப்படிப்பட்டவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன். அப்படிச் செய்தால் இவர்களுக்கு வெளியிடத்திலிருந்து வரும் இன்னல்கள் ஏராளம்." இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட நம்மவர்களை என்னவென்றுரைப்பது??
சென்னையைச் சார்ந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் நம் சமுதாயத்தைச் சார்ந்தவர். ஆயினும் அவரை நம் சமுதாயம் உபயோகப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. நமது சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க எடுத்த முயற்சிகள் இன்னும் வெற்றிபெற வில்லை. அப்படி சேர்க்கப்பட்டால் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

தியாகராஜபாகவதரின் சிலைகளைத் திறப்பதால் கிடைக்கும் நன்மைகளை விட, நம் சமுதாய மக்களின் கல்விக்காக உதவித் தொகைகள் வழங்க நமது சங்கங்கள் முன்வர வேண்டும்.

நமது சமுதாயம் முன்னேற கீழ்க்கண்டவற்றை நாம் நடைமுறைப் படுத்தியே ஆகவேண்டும்.

1.  நம் சமுதாய மாணவர்களின் உயர்கல்விக்காக, நம் சமுதாயம் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கப் படவேண்டியது அவசியம்.

2. நம் குலத்தொழிலை சிரமேற்கொண்டு செய்து வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் சங்கம் அமைப்பது இன்றியமையானது.

3. வறுமையில் வாடும் நம் குலத்தைச் சார்ந்த மக்கள், மதமாற்றம் செய்யப்படுவது தடுக்கப் பட வேண்டும்.

4. சுயக் கட்டுப்பாடு, தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டு சான்றோனாதல், நம் சமுதாய மக்களுக்கு நாமே உறுதுணையாக இருத்தல் என்பதோடு மட்டுமல்லாது, விஸ்வகர்மாவாக இருப்பதில் பெருமை கொள்ளுதல் வேண்டும்


இந்த கட்டுரையை தொகுத்து அனுப்பிய நம் உறவினர் மு. கந்தசாமி நாகராஜன்,சுப்பிரமணியபுரம் அவர்களுக்கு மிக்க நன்றி.

Thursday, October 13, 2011

மத்திய அரசின் கல்வி உதவி


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கல்வி உதவி பெற விரும்புவோரின் மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசால் 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட +2 தேர்வில், குறைந்தபட்சம் 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ 4 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவிகள் விவரம்:-
(1)    இளநிலை பட்டப்படிப்பு (கல்லூரியில் படிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்) முதலாமாண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை மாதம் ரூ. 1000   
(2)    முதுநிலை பட்டப்படிப்பு தொடர விரும்பினாலும், அதற்கும் மாதம் ரூ. 2000   
(3)    பொறியியல் படிப்பவருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1000 அதன் பிறகு மாதம் ரூ2000. மேலும் விவரங்களுக்கு, விண்ணப்ப படிவத்திற்கு இங்கே சொடுக்கவும் http://www.tn.gov.in/dge/

--------------------------------------------------------------------------

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006.

“CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS”
Applications are invited from eligible students for the award of scholarship under the
above scheme. The candidates who have passed and secured a minimum of 80% of marks
and above in the Higher Secondary Examination held in March 2010, conducted by the State
Board of School Examinations, Tamil Nadu and pursuing FIRST YEAR of higher studies in
2010-2011 (not correspondence or distance mode) are eligible to submit application for getting
scholarship announced by the Ministry of Human Resource Development, Department of
Higher Education, Government of India.

From the applications received, the required number of 4883 applications will be
selected based on merit category wise.

The scholarship will be given @ Rs.1000/- per month at Graduation level for first three
years of College and University courses and Rs.2000/- per month at Post graduation level.
Students pursuing professional courses would get Rs.2000/- per month in the 4
th and 5th year.
The scholarship would be paid for 10 months in an academic year.
The award of scholarship shall be subject to the following conditions:
1. The scholarship shall be awarded to the Indian nationals only.

2. The Undergraduate/Post graduate/Professional courses are pursued in a recognized
college/institution in India.

3. The students should belong to non-creamy layer (Parental income not exceeding Rs.4.5
lakhs per annum) as defined by the Department of Personnel and Training in their
Notification No.36012/22/93-Estt. (SCT), dated 08.11.1993 and as modified vide their
OM No.36033/3/2004-Estt. (Res) dated 09.03.2004 and as may be further modified
from time to time and not availing of any other scholarship scheme.

4. The reservation would be applicable in terms of Central Reservation Policy and internal
earmarking.

5. The scholarship will be distributed amongst Pass outs of the Science, Commerce
Humanities and Vocational Streams in the ratio of 3: 2: 0.5: 0.5 with equal number
among boys and girls.

The Blank application forms can be downloaded by the eligible candidates through
http://www.tn.gov.in/dge on or before 12.11.2010.

The filled-in applications (Annexure III to VI the formats of which are available in this
website) should be submitted to the Joint Director (Hr.Sec.), Directorate of Government
Examinations, DPI Campus, College Road, Chennai – 6 on or before 16.11.2010 either by
Registered or Speed Post.
Needless to mention that this is a provisional offer only and final selection will depend upon
the student satisfying the eligibility criteria and number of scholarships ear-marked for this
Board.
Director of Government
Examinations, Chennai – 6.


--------------------------------------------------------------------------

Learn Astrology

Monday, October 10, 2011

வேலை வாய்ப்புகள் - BHEL

பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 800 இன்ஜினியர் இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தமுள்ள 800 இடங் களில் மெக்கானிக்கல் பிரிவுக்கு 550 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 175 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு 75 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது: இளநிலை பிரிவுக்கு 27 வயதிற்கு மிகாமலும், முதுநிலை பிரிவுக்கு 29 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லதுஎம்இ பட்டம். விண்ணப்பதாரர் கள் முதலில் கேட்-2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள், பெல் நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

கேட்-2012 பற்றிய தகவல்களைப் பெற http://careers.bhel.in/bhel/static/etgate2012.pdf என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கேட்-2012 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2011.
பெல் நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப் பிக்க கடைசி தேதி: 28.01.2012.