Sunday, January 30, 2011

ஜாதி அடையாளம் தேவையா?

தமிழ் விஸ்வகர்மா அன்பர்களே !

           ஜாதி அடையாளம் நமக்குத் தேவையா? என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடியிருக்கிறாரே ! என்றும் பாரதியை, நினைவுபடுத்தினார். பிராமண குலத்தில் பிறந்த, பாரதியார் அவ்வாறு பாடியமைக்காக அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. குடிக்க கஞ்சி இல்லாமல், உடுத்த துணியில்லாமல், உள்ளூரில் வசிக்க இயலாமல், உற்றார் உறவினர் அவரை வெறுத்து ஒதுக்கியதால் அவர் அடைந்த கஷ்டங்கள், எண்ணிலடங்காது ! பாரதி பாடி நூறு ஆண்டுகளுக்கும் மேலாகியும், இன்னும் மத்திய, மாநில அரசுகளில், பிராம்மணர்கள் முக்கிய பதவியில் உள்ளனர். அம்பேத்காரின், போராட்டமும், சட்ட உருவாக்கமும், அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருந்தும், அவர்கள் எப்படி முக்கிய பொறுப்புகளில் இன்னும் உள்ளனர், அது தான் அவர்களின் ஒற்றுமை. இன்றும் பத்திரிக்கை துறைகளில், அவர்கள் எழுதுவது தான் செய்தி, ஆனையை பூனை ஆக்குவார்கள், பூனையை ஆனையாகவும் ஆக்குவார்கள்.

           நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விஷயத்தை வைத்து, இந்த தலைப்பை ஆராயலாம். அதிக சம்பளமும், கவுரமும், மரியாதையும், அரசாங்கத்தில், மிகவும் உயர் பதவி என்றும், அமெரிக்க விண்வெளி மைய நாஸா விஞ்ஞானியை எல்லோரும் போற்றுவார்கள். அதைப் போன்ற ஒரு அமைப்பே, அதற்கு எந்த வகையிலும் குறையாத சொந்த விஞ்ஞானிகளைக்  கொண்ட அமைப்பே நமது இந்தியாவின், பெருமை மிகு, விண்வெளி ஆராய்ச்சி மையம் “இஸ்ரோ” ஆகும்.

           இஸ்ரோவில் சேர வேண்டும் எனில், கல்வித் தகுதியுடன், அறிவு ஜீவியாகவும், ஆராய்ச்சியில் ஈடுபாடும் உடையவர் தான், பல சோதனைத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, முதலில் துணை விஞ்ஞானியாக  சேர முடியும். பிறகு படிப்படியாக உங்கள் திறமை, அனுபவம், கொடுக்கப்பட்ட வேலையில் வெற்றி பெற்று, சாதித்தால் தான், துணை விஞ்ஞானியாக இருந்து பிறகு விஞ்ஞானியாக முடியும். அவரே ஒரு சேர்மன் பதவிக்கு வர வேண்டும் என்றால், குறைந்தது 20 வருடங்களாகும். அப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருந்த மாதவன் நாயர், தன் ஜாதி அடையாளங்களை விட்டாரா? அவர் பெயரை வைத்தே அவர், ஜாதியையும், அவர் சார்ந்த மாநிலததையும், எல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறது.

           100 வருடங்களுக்கு முன்பு வரை, நாயர் ஜாதியினர் எப்படி, சீரழிந்து, தென்னிந்தியாவின் கலாசாரத்தை எப்படி சீரழித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாறு அறிந்த எல்லோருக்கும் தெரியும். மேலும், நாயர்களின் வரலாற்றை, தெரிந்து கொள்ள விரும்புபவர்கள். இந்த பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க்-ஐ கிளிக்கினால் போதும். இப்பொதே, கிளிக் செய்ய போய்விடாதீர்கள். சற்று பொறுமையாக, இந்த பதிவை முழுவதும், படித்துவிட்டு பின்பு செல்லலாம்.
         
           எனக்கு தனிப்பட்ட முறையில், யாரோடும் பிணக்கோ அல்லது எந்த ஜாதியோடும் துவேஷமோ அல்ல. நம்முடைய, தமிழ் விஸ்வகர்மாவைச் சார்ந்த ஒரு இளைஞருக்காகவே இந்த பதிவை எழுதுகிறேன். அவர் இதனைப் படித்து, தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள வேண்டும், விஸ்வகர்மா என்று சொன்னால் கேவலம் என்ற தன்னுடைய, தாழ்வு மனப்பாண்மையை போக்க வேண்டும் என்ற ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகவே இதனை படிக்கும் அன்பர்கள் கருத வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

           அப்படி கேடு கெட்ட ஒரு ஜாதியில் பிறந்து, மிகப் பெரிய பதவியை அடைந்தாலும், அவர்கள் தன் ஜாதியை விட்டுக் கொடுக்காமல் இன்றும் தன் பெயர் நிலைக்குமாறு, தன் பெயரில் ஜாதி நிலைக்குமாறு ஒவ்வொரு செயலையும் செய்து வருகிறார்கள்.

           இன்னும் பல உதாரணங்கள் உண்டு அன்பர்களே! இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், நடிகை நவ்யா நாயர், நம்பியார் என்று இந்த பட்டியல் நீளும் ...

           அதனால், அன்பர்களே ! பெருமை மிகு ஜாதியாம் விஸ்வகர்மாவில் பிறந்ததற்காக பெருமைப்படுங்கள். நாம் கோவில், கட்டினால் தான், சிலை செய்தால் தான், அய்யர் அர்ச்சனை செய்ய முடியும். இந்த உலகத்தைப் படைத்தவரே, நம் விஸ்வகர்மாதான் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. விஷ்னுவின் கையில் உள்ள சக்கராயுதத்தை, வடிவமைத்து செயல்படுத்தி காட்டிய பெருமை, நமக்கே உரியது என்று, விஷ்னு புராணம் சொல்லுகிறது.

           உலக அளவில் இருந்து, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவைப் பார்க்க வந்த, சுற்றுலா பயணிகளினால்  நமது நாட்டிற்கு கிடைத்த அன்னிய வரவு ரூ 50, 000 கோடி. அவர்கள், நம் முன்னோர்களின் (விஸ்கர்மா) திறமையையும், தொழில் நுட்பத்தையும் கண்டு, எண்ணி எண்ணி வியப்படைகிறார்கள். அவ்வளவு பெருமை மிகு இனமாம், நம் விஸ்கர்மா இனம்.

          திருமணம், நல்லது கெட்டது போன்ற விஷயங்களில் மட்டுமே, நம்முடைய ஜாதி அடையாளத்தைத் தேடுகிறோம். மற்ற நேரங்களில், வசதியாக நாம் மறந்து விடுகிறோம். எங்களுடைய மதத்தில் சேர்ந்தால், ஜாதி பாகுபாடு பார்க்க மாட்டோம், அனைவரும் சமம் என்று சொல்லி, பாவப்பட்ட தலித்துகளை மதம் மாற்றுகிறார்கள். ஆனால் மதம் மாறியவுடன், மதத் தலைவர்கள், வேலை முடிந்தது என்று கழன்றுவிடுகிறார்கள். கடந்த வாரம், திருநெல்வேலியில், 3000 தலித் கிறிஸ்துவர்கள் ஜாதி அடிப்படையில், இட ஒதுக்கீடு வேண்டும் என்று  போராடி, தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள். சாதி வேண்டாம் என்று சொல்லி மதம் மாறியவர்கள் கூட ஜாதியை விடவில்லை. இன்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாடார் இனம் உள்ளது. இந்து நாடார், கிறிஸ்துவ நாடார். ஜாதியை விட்ட பாடில்லை. நாம் மட்டும் ஏன் விட வேண்டும்.

           இப்பொழுது கூறுகிறேன் என்ன விஷயம் என்று, தமிழ் விஸ்வகர்மா இளைஞருக்கு, நம் சார்பாக, தமிழ் விஸ்வகர்மா என்ற மின்னஞ்சல் பெயரில், ஃபேஸ்புக்கில் ஒரு திருமண நிச்சயதார்த்த வாழ்த்து கடந்த வாரம் அனுப்பியிருந்தேன். ஓரே நாளில் அதனை நீக்கிவிட்டார், மற்ற எல்லோரின் வாழ்த்தும் (எனக்கு முன்பு அனுப்பியது, எனக்கு பின்பு அனுப்பியது)  இருக்கிறது. ஆனால் விஸ்வகர்மா என்ற அடையாளம் ஏனோ அவருக்கு பிடிக்கவில்லை போலும், நீக்கி விட்டார், என்பதை மிகவும் வேதனையுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம் !
அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க



Thursday, January 27, 2011

கல்‌வி


தமிழ் ‌விஸ்வக‌‌ர்மா சமூகத்தில் அன‌ைவரும் கல்‌வி கற்க வ‌ேண்டும் என்பது எங்கள் நோக்கமாகும். எண்ணும், எ‌ழுத்தும் கண்ணாகும். கற்றவனுக்கு ச‌ென்ற ‌இடம் எல்லாம் சிறப்பு. இது போன்ற இன்னும் பல சிறப்புகள‌ை கல்விய‌ை குறித்து நம் சான்றோர்கள் கூறிச் ச‌ென்றனர். ஆனால் இன்னும் நம்ம‌ில் பலர் கல்‌வி கற்காமலும் தங்களுடைய குழந்த‌ைகள‌ை பள்ள‌ிக்கு அனுப்பாமலும் இருக்கின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் ‌அடிப்பட‌ையில், பொருளாதார வசதியின்மையும், சமூக விழிப்புணர்வு இல்லாமையும் முக்கிய காரணங்களாகும். 

இந்த தளத்தைக் காணும், நம்முடைய சமூகத்தைச் சேர்ந்த, வசதி படைத்தவர்கள், தங்களால் இயலுமெனில், ஒரு விஸ்வகர்மா குழந்தையின் படிப்புக்கான செலவை ஏற்றுக் கொண்டால், அது மிகப் பெரிய புண்ணியமாகும். அந்த ஒரு குழந்தையின் கல்வி வளர்ச்சி, பின்னாளில் ஒரு குடும்பத்திற்கான வளர்ச்சிக்கு வழி வகை செய்யும். 

இந்த தளத்தைக் காணும், நம்முடைய சமூகத்தைச் சேர்ந்தவர், வசதியில்லை, ஆனால் படித்தவராக இருப்பின், அருகில் உள்ள விஸ்வகர்மா குழந்தைகளுக்கு மாலை நேரத்தில், விடுமுறை நாட்களில், இலவசமாக டியூஷன் எடுக்கலாம். குறிப்பாக, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கிரகிக்கும் தன்மை அதிகம் உள்ளதால், நீங்கள் சொல்வதை எளிதில் புரிந்து கொண்டு, அடிப்படைக் கல்வியை நன்கு கற்பதால், அடுத்து வரும் உயர் கல்விகளில் பயமில்லாமல், தன்னம்பிக்கையுடன், நல்ல மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.

நல்ல மதிப்பெண்கள் பெற்றும், உயர்கல்வியில் சேர ஆர்வம் இருந்தும், கல்விக்கட்டணம் செலுத்த இயலாத, மாணவ மாணவியருக்கு, உதவி செய்யலாம். மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழை நகல் எடுத்து அனுப்பி வைத்தால், எங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய இயலும்.

அன்பன்
விஸ்வகரன்

Wednesday, January 26, 2011

நோக்கம்

           (3) இலவசமாக ஜாதகம் கணித்து, பலன்    
                மற்றும் ஆலோசனை கூறுதல்
           (4) திருமணப் பொருத்தம் பார்த்தல் இலவசம்
           (5) ஏழைகளுக்கான திருமண உதவிகள்
           (6) திருமண அமைப்புகளின் மூலம் வரன்  
                தேடுதல்
           (7) கல்விக்கான இலவச ஆலோசனை 
                 வழங்கல்
           (8) வேலை வாய்ப்புகளைத் தேடி, இலவச 
                ஆலோசனை வழங்கல்
           (9) வேலையில் சேரும்போது, நேர் காணலில்
           (12) இலவச சிறு தொழிற் பயிற்சி
           (13) மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள்
           (14) ஆதரவற்ற முதியவர்களுக்கான 
                  உதவிகள்
           (15) சமுதாய விழிப்புணர்வு
        


மேலும், தமிழ் விஸ்கர்மா சமூகத்திற்கான, உதவிகளிலும், சமூகப் பணிகளிலும் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்ப்பதுவுமே, நமது கடமையாகும்.

அன்பன்
விஸ்வகரன் 
 
tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க

Tuesday, January 25, 2011

தமிழ் விஸ்வகர்மா - ஓர் அறிமுகம்

           தமிழ் விஸ்வகர்மா என்று என்னை அறிமுகப்படுத்துவதிலும், சொல்வதிலும் நான் பெருமையடைகிறேன். பல இணைய தளங்கள் விஸ்வகர்மாவைப் பற்றியும், அவர்களின் புகழ், ஆயிரக் கணக்கான வருடங்களாக, அவர்கள் பாரத நாட்டிற்கு அறிவியல் பூர்வமாகவும், கலை மற்றும் தொழில் நுட்பத்துடனும், செய்த சீர் மிகு பணிகள் ஆகியவற்றை விளக்குகின்றன.

           தமிழ் விஸ்வகர்மா என்று என்னை, ஏன் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன் என்றால், உங்களுடன் உரையாட, கலந்தாலோசிக்க, உறவுப் பாலமாக இருப்பது, தாய்த் தமிழ் மொழியாகும். மேலும், ஆகம விதிப்படி, தமிழ் விஸ்வகர்மாவினர், தமிழ் நாட்டில் செய்து வரும் திருப்பணிகள் எண்ணிலடங்காது. தமிழ் நாட்டில், ஆயிரக் கணக்கான வருடங்களாகப் பின்பற்றி வருகின்ற, சித்தாந்தங்களுக்கு உயிர் கொடுத்தது, நம்மவர்களே ! என்ற விஷயம் பெருமை படத் தக்கதே !

           உங்களுடன், மனம் திறந்து பேச, குழந்தைப் பருவம் முதல், தாய்க்கு அடுத்தபடியாக, என் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழின் வழியாக உங்களைத் தொடர்பு கொள்ள, நான் தீர்மானித்தது, இந்த தமிழ் விஸ்வகர்மா என்ற வலைப் பூ. தொடர்ந்து என் பதிவைப் படியுங்கள், கலந்தாய்வு செய்யுங்கள், ஒரு பயனுள்ள தளமாக மாற்றுங்கள். 

என்றும் அன்புடன்,
விஸ்வகரன்
26 ஜனவரி 2011

ஜோதிடம் கற்க

(அடுத்த பதிவு : எமது நோக்கம்)