Sunday, June 3, 2012

நம் இன மக்களின் கல்வியை உயர்த்துவோம் !


நம் இன மாணவச் செல்வங்கள், இன்று வெளிவரும் தமிழக அரசின் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில், சிறந்த மதிப்பெண்களைப் பெற வாழ்த்துகிறோம். மாநில அளவில் தர வரிசைப் பட்டியலில் முதல் 3 மாணவர்களில் ஒருவராக வரும் நம் இனத்தைச் சேர்ந்த மாணவருக்கு ரூ 50,000 /- (ரூபாய் ஐம்பதாயிரம்) பரிசுத் தொகையாக அறிவிக்கிறோம். மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு ஊக்கப் பரிசாக ரூ 5,000 /- (ரூபாய் ஐந்தாயிரம்) பரிசுத் தொகையாக அறிவிக்கிறோம். இங்கு எம்முடன் கை கோர்த்துள்ள  அன்பர்கள் இந்த செய்தியை நம் இன உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன். மதிப்பெண் மற்றும் மாணவர்களின் விவரங்களை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறு தங்களை சிரம் தாழ்த்தி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். மாணவிகளுக்கு கூடுதல் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. தமிழை பயிற்று மொழியாக கொண்ட மாணவருக்கும், கூடுதல் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.

அன்பன் 
விஸ்வகரன் 

Wednesday, February 22, 2012

வரவேற்கிறோம்

அன்பு உறவினர்களே

நாம் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் விஸ்வகர்மா இணையதளம், ஏற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. தமிழ் விஸ்வகர்மா அன்பர்களுக்கு இது ஒரு பயனுள்ள தளமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். கீழ்க்காணும் சுட்டியை கிளிக் செய்வதன் மூலம் நமது தமிழ் விஸ்வகர்மா இணையதளத்தை அடையலாம். எங்களுடன் இணைந்து, தாங்களும் பயன் பெற்று, மற்றவர்களுக்கும் பயன் தரும் வகையில் சமூகப் பணியாற்றுமாறு, வேண்டி விரும்பிக் கேட்டுகொள்கிறோம். பதிவு செய்யப்படும் விவரங்கள் தங்களின் அனுமதியின்றி வேறு யாருக்கும் தரமாட்டோம் என்று உளமார உறுதி கூறுகிறோம்

தமிழ் விஸ்வகர்மா கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் கல்யாண மாலை நிகழ்ச்சியினை சித்திரை மாதத்தில் சென்னை அல்லது மதுரையில் நடத்த உள்ளோம். தங்களின் விருப்பத்திற்கிணங்க இடத்தை தேர்வு செய்யவும். பெரும்பாண்மையை வைத்து இடத்தை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கிறோம்.

கலந்தாய்வுக் கூட்டத்தில் பின் வரும் மிக முக்கியத் தீர்மானங்களை எடுக்கவிருக்கிறோம்:

(1) பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு உதவி செய்தல் 
(2) வேலை வாய்ப்பு (தகவல் மற்றும் ஏற்பாடு செய்தல்)
(3) கல்வி - பரிசுகள் தந்து ஊக்குவித்தல்
(4) சுயம்வரம் (மணமகள்-மணமகன் விவரங்களை சேகரித்து உதவுதல்)

மேலும் தாங்கள் அறிவுறுத்தும் தீர்மானங்களையும், யோசனைகளையும், நிறைவேற்றி, செயல்படுத்த ஒன்று கூடுவோமாக !

இடம், தேதி போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பதிவிடவும்

கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் கல்யாண மாலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், நமது இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு  கேட்டு கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.  


வாழ்க வளமுடன் !

அன்பன்
விஸ்வகரன் 


Monday, January 9, 2012

வேலை வாய்ப்பு


என்.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்
ஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் உதவிப் பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: உதவிப் பேராசிரியர்
கல்வித் தகுதி: இன்ஸ்ட்ரூமெண்டேஷன் - கண்ட்ரோல்/ எலெக்ட்ரானிக்ஸ் - கம்யூனிக்கேசன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இண்டஸ்ட்ரியல் - புரொடக்ஷன் என்ஜினீயரிங்/ மெக்கானிக்கல்/ சிவில்/ கெமிக்கல்/ டெக்ஸ்டைல்/ பயோ-டெக்னாலஜி/ இயற்பியல்/ கணிதம்/ வேதியியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றதற்குப்பின் எம்.டெக்./ .M.Phil./ எம்.பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35க்குள்
சம்பளம்: 35,000
நேர்முகத் தேர்வு நாள்: 03.01.2012
மேலும் விவரங்களுக்கு: www.nitj.ac.in

------------------------------------------------------------------------
பெல் (BHEL) நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்கள்

த்திய அரசின் கீழ் இயங்கி வரும் பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.டெக்., பி.இ. பட்டம் பெற்றிருக்கவேண்டும். 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். காலியிடங்கள் 800.
12.02.2012-
ஆம் தேதி நடைபெற இருக்கும் கேட் 2012 தேர்வுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி பெல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012
விவரங்களுக்கு: www.careers.bhel.in

உயர் கல்வி


உதவித் தொகையுடன் மேனேஜ்மெண்ட் ஆராய்ச்சிப் படிப்பு
திருச்சியில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.


திருச்சியில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிலையத்தில் மேனேஜ்மெண்ட் முழுநேர ஆராய்ச்சிப் படிப்பு (ஃபெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மெண்ட் - ஐந்து ஆண்டு) தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும் BE, B.Tech, B.Arch போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைந்தபட்சம் 21 மாதங்கள் படிப்பு சம்பந்தமாக ஏதேனும் ஒரு துறையில் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜ்மெண்ட் அல்லாத வேறு ஏதேனும் ஒரு படிப்பில் முதுநிலை பட்டப் படிப்பு படித்திருக்கும் மாணவர்கள் 21 மாதங்கள்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை மருத்துவப் படிப்பு படித்திருக்கும் மாணவர்களும் இந்த மேலாண்மை ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

2011
ஆம் ஆண்டு நடத்தப்பட்ட  ஜிமேட், கேட், ஜி.ஆர்.இ.  போன்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
உதவித் தொகை
எஃப்.பி.எம். (Fellow in Programme Managment) படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம், தங்கும் செலவு, புத்தகம் மற்றும் இதரச் செலவுகளுக்காக ஓர் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஓர் ஆண்டுக்கு வழங்கப்படும். கல்வி வளாகத்தில் தங்கியிருந்து படிக்காமல், கல்வி வளாகத்திற்கு வெளியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும். இதுதவிர மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் இதரச் செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இந்த உதவித்தொகை, மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இந்தப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கல்வி நிலையத்தின் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஜனவரி 30.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:

Admissions Office,

Indian Institute of Management,
Tiruchirappalli – 620 015.

விவரங்களுக்கு: www.iimtrichy.ac.in

Wednesday, January 4, 2012

தங்க நகைகளுக்கு இனி 'ஹால்மார்க் முத்திரை' கட்டாயம்!

நுகர்வோர் நலன் கருதி, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 

இதுதொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 1986 ஆம் ஆண்டின் இந்திய தரச் சட்டத்தில் (Bureau of Indian Standards-BIS) திருத்தம் கொண்டு வர ஒப்புதல் கொடுத்துள்ளது.


ஹால்மார்க் வந்தது எப்படி? 

தங்கத்தின் மீது ஹால்மார்க் முத்திரை பதிக்கும் வழக்கம் 13 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் தொடங்கியது. பின்னர் அது இங்கிலாந்துக்கு பரவி லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற பொற்கொல்லர் அரங்கில் (Goldsmiths' Hall) வழக்கமானது. இந்த பொற்கொல்லர் அரங்கில்தான் தங்கத்தின் சுத்தத்துக்கான பொற்கொல்லர் 'முத்திரை' அந்த காலத்தில் பதிக்கப்பட்டு வந்தது. அந்த Goldsmith's Hall என்ற சொல்லே காலப்போக்கில் மருவி Hallmark என்றாகிவிட்டது.


கேரட்


சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.
யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.


 சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த  'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.)  அலுவலகம் இருக்கிறது.