Monday, October 31, 2011

நமது குலத்தவரின், குலத்தொழில்களின் நசிவு

உலகுக்கு கலையை அறிமுகம் செய்த உத்தம கலைஞர்கள் நம் விஸ்வகுலத்தினர். ஆனால் இன்றைய சமுதாயத்தில் நம் குலத்தவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏராளம். நம் குலத்தவர் அறிந்து பாடவேண்டிய கீழ்க்காணும் குலக்கீர்த்தியை நம்மில் எத்தனை பேர் அறிந்துள்ளனர்.?

"பஞ்சவர்ணம் கொஞ்சுமுகம் ஐந்து பேர்கள்
பரமனுடைய திருக்கண்ணில் உதயமானார்.
கொஞ்சிவரும் கிளிமொழியாள் உமையாள் புத்திரர்
குருவான மனு, மயா, த்வஸ்ட்டா, சிற்பி, விஸ்வஞ்ஞா என்னும்
விஞ்சையுடன் தேவர்களுக்கும் தொழில் வகுத்து
விஸ்வகர்மாவென்னும் நாமம் பெற்று
தஞ்சமுடன் இவர்கள் ஐந்து பேர்களையும்
சகலகலை குருவென்று சாற்றினார் காண்"

உலகின் கலைகளனைத்துக்கும் குருவாக விஸ்வகர்மாவை அமைத்து, நம் மக்களை உலகின் முன்னோடியாக படைத்தான் இறைவன். ஆனால் தன்னிலை அறியாது இன்றைக்குக் கீழ்நோக்கிப் போய்விட்ட நம்மவர்களின் நிலைக்குக் காரணம் யார்? சத்தியமாக நாமேதான். நம்மிடையே அற்றுப்போன ஒற்றுமை, தனிமனித ஒழுக்க நிலை போன்றவைதான் முதன்மையான காரணம்.

முக்காலத்தில் தமிழகத்துக் கம்மாளர்கள் கலைகளின் முன்னோடியாக விளங்கினார்கள். மிகச்சிறந்த கலைநுட்பமும், பேராற்றலும் படைத்து, கட்டிடக்கலையில் மிகச்சிறந்து விளங்கினார்கள். இவர்களுக்கு போர்ப்பயிற்சி இல்லை.  ஆனாலும் தம் சமுதாயத்தவரின் பாதுகாப்பிற்காக 
சிறந்த அரண்களை அமைத்துத் தம்மைக் காத்துக் கொண்டிருந்தனர்.  இச்சமயத்தில்தான் முஸ்லீம்களின் படையெடுப்பு நடந்தது. என்ன முயற்சி செய்தும் முஸ்லீம்களால் நம்மவர்களை நெருங்க இயலவில்லை. இவர்களின் கலைத்திறனைப் பற்றி அறிந்து கொள்ளவும் இயலவில்லை. அச்சமயத்தில் அவர்கள் தொடுத்த சில பாணங்களால், நம்மவர்களில் சிலர் கோடாரிக்காம்பாகிப் போனார்கள். ஆனால் அதற்கு முன்னரே மிகச்சிறந்த கட்டடங்களை, அறிவுநுட்பத்துடன் படைத்து உலகுக்களித்த முன்னோடிகள் நம் கம்மாளர்கள். இது போன்ற சேர்க்கைகளால்தான் இன்றைக்கும் தமிழகத்துக் கம்மாளர்கள், முஸ்லீம்களுடனான உறவைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லீம்களுக்கும், நமக்குமான உறவுமுறை நாம் அறிந்ததே...

நம்மவர்களை சீர்ப்படுத்தி சுய ஒழுக்கத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது படித்த நம் அனைவரின் தலையாய கடமை.  அமாவாசை நாளில் நம்மவர்கள் ஐந்தொழில்களுக்கும் விடுமுறை அளித்திட வேண்டும் என்பது விதி.  மீறி செய்ய வேண்டுமென்றால் கத்தரிக்காயை உண்டு பின்னர் செய்ய வேண்டும். ஆனால் நாம் இதைக் கடைபிடிப்பதில்லை.
 முன்னோர்கள் வகுத்த விதிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டியது நமது கடமை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மீனவர்களுக்கு பணியில்லாத நாட்களில் வருமானம் இவை போன்று பிற சமுதாயத்தவர்க்குக் கிடைக்கும் சலுகைகள் நம்மவர்களுக்கு அரசாங்கத்தால் கிடைப்பதில்லை.. தேர்தல் நேரங்களில் நம்மை நெருங்கிவரும் அரசியல்வாதிகள், பிற நேரங்களில் காணாமல் போவது வாடிக்கையாகி விட்ட சூழ்நிலையில், நாம் நமக்கென்று சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அரசியலிலும் அங்கம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.  இதற்கு நம்மவர்களை நாம்தான் தயார் செய்தாக வேண்டும்.

எங்கு நோக்கினும் வியாபார சிந்தனை கொண்டோர்கள் நம்மவர்களை நசித்துக் கொண்டிருப்பதைத்தான் நாம் காண்கின்றோம். தங்க நகைகளை மிகச்சிறந்த நுட்பத்துடன் செய்து தரும் தட்டானை விட, அதை வியாபாரம் செய்யும் வியாபாரிக்குக் கிடைக்கும் வருமானம் அதிகம். 
ஆகவே நாம் முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். 
இனிமேல் நமக்குத் தேவையான நகைகளை, நம்மவர்களிடம்
மட்டுமே செய்து தரச்சொல்லி வாங்கி அவர்களுக்கேற்ற வருமான வாய்ப்பைத் தர
வேண்டும்.

நம்மவர்களும், செய்யும் தொழிலை தெய்வமெனக் கொண்டு செய்து பழக வேண்டும். நமது தொழில் மூலம் பிறரை ஏமாற்றி வஞ்சிப்பது போன்ற காரியங்களை எந்த நிலையிலும் செய்திடக் கூடாது.
மாற்று சமுதாயத்தினரும் நம் தொழிலைக் கற்று நமக்குப் போட்டியாக வந்தது நமக்குப் பெரும் பின்னடைவுதான். ஆயினும், பிறப்பால் கம்மாளனான நம் தொழில் அறிவுக்கு இணையாக அவர்களின் நுட்பம் இருக்காது என்பதே உண்மை. 

நம் சமுதாயம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்றதாக மாற வேண்டும். அந்த நிலை வரும்போதுதான் நமது சமுதாயத்தவரின் தொழில் நுட்பத்தோடு, வணிக அறிவும் சேர்ந்து நமது பொருளாதார நிலை உயரும்.
தனது சுயநலனைக் கருதாது, நமது சமுதாயத்தவரின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுப்போரை நாம் ஆதரிக்க வேண்டும். "இளவயதில் இவனுக்கெதற்கு வேண்டாத வேலை? இப்படிப்பட்டவனுக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன். அப்படிச் செய்தால் இவர்களுக்கு வெளியிடத்திலிருந்து வரும் இன்னல்கள் ஏராளம்." இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட நம்மவர்களை என்னவென்றுரைப்பது??
சென்னையைச் சார்ந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் நம் சமுதாயத்தைச் சார்ந்தவர். ஆயினும் அவரை நம் சமுதாயம் உபயோகப்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. நமது சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க எடுத்த முயற்சிகள் இன்னும் வெற்றிபெற வில்லை. அப்படி சேர்க்கப்பட்டால் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

தியாகராஜபாகவதரின் சிலைகளைத் திறப்பதால் கிடைக்கும் நன்மைகளை விட, நம் சமுதாய மக்களின் கல்விக்காக உதவித் தொகைகள் வழங்க நமது சங்கங்கள் முன்வர வேண்டும்.

நமது சமுதாயம் முன்னேற கீழ்க்கண்டவற்றை நாம் நடைமுறைப் படுத்தியே ஆகவேண்டும்.

1.  நம் சமுதாய மாணவர்களின் உயர்கல்விக்காக, நம் சமுதாயம் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கப் படவேண்டியது அவசியம்.

2. நம் குலத்தொழிலை சிரமேற்கொண்டு செய்து வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் சங்கம் அமைப்பது இன்றியமையானது.

3. வறுமையில் வாடும் நம் குலத்தைச் சார்ந்த மக்கள், மதமாற்றம் செய்யப்படுவது தடுக்கப் பட வேண்டும்.

4. சுயக் கட்டுப்பாடு, தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டு சான்றோனாதல், நம் சமுதாய மக்களுக்கு நாமே உறுதுணையாக இருத்தல் என்பதோடு மட்டுமல்லாது, விஸ்வகர்மாவாக இருப்பதில் பெருமை கொள்ளுதல் வேண்டும்


இந்த கட்டுரையை தொகுத்து அனுப்பிய நம் உறவினர் மு. கந்தசாமி நாகராஜன்,சுப்பிரமணியபுரம் அவர்களுக்கு மிக்க நன்றி.

6 comments:

gopinathdaya said...

பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு! தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார்.

ஒரு நகையின் டிசைன்/ மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார்.

இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.

இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயமும் எழவில்லை.

புதிய தாராளவாதக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக உருவாகி வந்த சேவைத்துறை ஊழியர்களுக்கும் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டபடியால்ல், தங்கம் ஒரு சேமிப்பு என்ற நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கடந்து, அது இப்போது அந்தஸ்தின் அடையாளமாகி விட்டது.

நகை நுகர்வின் அதிகரிப்பு, அதன் உருவாக்க முறையில் மாற்றத்தை தோற்றுவித்தது. இதன் விளைவாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கின.

நகைத் தொழில் அதிகமாக நடந்து வந்த கோவையில் தொண்ணூறுகளின் இறுதியில் நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ‘ஜே ஜே’ என்று நகைப் பட்டறைகள் நடந்து வந்த பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று ஆனது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள், நான்கே ஆண்டுகளில் சுமார் 300 நகைத் தொழிலாளிகளுக்கும் மேற்பட்டோர், நகையைக் கழுவப் பயன்படும் சயனைடைத் தின்று தற்கொலை செய்துகொண்டார

Bala Ganesan Jeyapalan said...

Dear Sri.M.Kanthasamy Nagarajan,

I read your article with great interest.It touched my heart.Every word you say in your article is absolutely 100% true.I can really feel and sense the greatness of our ancestors. God Bless You.

Thank You,

Bala Ganesan Jeyapalan.
(London, U.K)

tamizhviswakarma said...

பின்னூட்டம் இட்டதற்கு நன்றி! திரு. கோபிநாத் அவர்களின் செய்தி அனைவரும் அறிந்த மெய்யான செய்திதான். மறுபடியும் படிக்கும் போது கண்ணீர் வருகிறது. இதிலிருந்து நாம் அறிய வேண்டிய விஷயம் என்னவெனில், 2,3 அண்ணன் தம்பிகள் இருக்கும் வீட்டில் ஒருவர் குலத்தொழிலை செய்யலாம், மற்றவர்கள் படித்து வேறு வேலைகளுக்கு சென்று நம் இனத்தை அழியாமல் காப்பாற்றலாம். தற்கொலை முயற்சி கோழைத்தனமானது. கல்வியறிவு இல்லாமையும், வேறு தொழில் அறியாததும், பொருளாதார சீர் கேடும் தான், தற்கொலை முயற்சிகளுக்கு காரணம். இதனை குறித்து, தடுக்கும் வழிமுறைகளை குறித்தும் ஆராயலாமே !

மு. கந்தசாமி நாகராஜன் said...

ஐயா அவர்களுக்கு,
அடியேனின் வணக்கங்கள்... அக்கட்டுரையின் சில பகுதிகள் மட்டுமே அடியேன் எழுதியது. எஞ்சியவை அனைத்தும் முகநூலில் விவாதம் செய்த அன்பர்களின் கருத்துக்கள்... அவற்றை மொழியாக்கம் செய்தது மட்டுமே அடியேனின் சிறு பங்களிப்பு.... எனவே தங்களின் பாராட்டுக்கள் அனைத்தும் விவாதம் செய்தோருக்கே செல்ல வேண்டும்...
ஐயாவின் பாராட்டுக்களுக்கு, அடியேனின் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்..
நன்றி.
அன்புடன்
மு. கந்தசாமி நாகராஜன்
சுப்பிரமணியபுரம்.

மு. கந்தசாமி நாகராஜன் said...

இன்னொரு தகவலையும் அடியேன் இவ்விடத்துத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். சகோதரி திருமதி. சாந்தி அவர்கள் பணித்ததன் விளைவே இத்தொகுப்பு... எனவே அனைத்தும் அவர்களுக்கே உரித்தாக வேண்டும்.... மேலும் நாம் நம் சமுதாய முன்னேற்றத்துக்காக என்னவெல்லாம் செய்ய இருக்கின்றோம் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்... குலத்தொழிலை விட்டு வேறு பணிக்கு வந்த முட்டாள்களில் அடியேனும் ஒருவன். எனவே நம் குலத்திற்கு அடியேனால் ஏற்பட்ட இழுக்கை எவ்வகையிலாவது ஈடேற்ற முயன்று கொண்டிருக்கின்றேன்...
நன்றி.
என்றும் அன்புடன்
மு. கந்தசாமி நாகராஜன்.
சுப்பிரமணியபுரம்.

manimalar said...

நன்றாக இருக்கிறது. மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்க கோரி நாம் தற்போது நமது சாதியை சார்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களிடம் மனு கொடுக்கலாம்