Showing posts with label viswakarma. Show all posts
Showing posts with label viswakarma. Show all posts

Monday, January 9, 2012

வேலை வாய்ப்பு


என்.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்
பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் உதவிப் பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: உதவிப் பேராசிரியர்
கல்வித் தகுதி: இன்ஸ்ட்ரூமெண்டேஷன் - கண்ட்ரோல்/ எலெக்ட்ரானிக்ஸ் - கம்யூனிக்கேசன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இண்டஸ்ட்ரியல் - புரொடக்ஷன் என்ஜினீயரிங்/ மெக்கானிக்கல்/ சிவில்/ கெமிக்கல்/ டெக்ஸ்டைல்/ பயோ-டெக்னாலஜி/ இயற்பியல்/ கணிதம்/ வேதியியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றதற்குப்பின் எம்.டெக்./ .M.Phil./ எம்.பி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35க்குள்
சம்பளம்: 35,000
நேர்முகத் தேர்வு நாள்: 03.01.2012
மேலும் விவரங்களுக்கு: www.nitj.ac.in

------------------------------------------------------------------------
பெல் (BHEL) நிறுவனத்தில் பொறியாளர் பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பெல் நிறுவனத்தில் என்ஜினீயர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.டெக்., பி.இ. பட்டம் பெற்றிருக்கவேண்டும். 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். காலியிடங்கள் 800.
12.02.2012-
ஆம் தேதி நடைபெற இருக்கும் கேட் 2012 தேர்வுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி பெல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2012
விவரங்களுக்கு: www.careers.bhel.in

உயர் கல்வி


உதவித் தொகையுடன் மேனேஜ்மெண்ட் ஆராய்ச்சிப் படிப்பு
திருச்சியில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.


திருச்சியில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிலையத்தில் மேனேஜ்மெண்ட் முழுநேர ஆராய்ச்சிப் படிப்பு (ஃபெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மெண்ட் - ஐந்து ஆண்டு) தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும் BE, B.Tech, B.Arch போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைந்தபட்சம் 21 மாதங்கள் படிப்பு சம்பந்தமாக ஏதேனும் ஒரு துறையில் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜ்மெண்ட் அல்லாத வேறு ஏதேனும் ஒரு படிப்பில் முதுநிலை பட்டப் படிப்பு படித்திருக்கும் மாணவர்கள் 21 மாதங்கள்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை மருத்துவப் படிப்பு படித்திருக்கும் மாணவர்களும் இந்த மேலாண்மை ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

2011
ஆம் ஆண்டு நடத்தப்பட்ட  ஜிமேட், கேட், ஜி.ஆர்.இ.  போன்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
உதவித் தொகை
எஃப்.பி.எம். (Fellow in Programme Managment) படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம், தங்கும் செலவு, புத்தகம் மற்றும் இதரச் செலவுகளுக்காக ஓர் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஓர் ஆண்டுக்கு வழங்கப்படும். கல்வி வளாகத்தில் தங்கியிருந்து படிக்காமல், கல்வி வளாகத்திற்கு வெளியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும். இதுதவிர மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் இதரச் செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இந்த உதவித்தொகை, மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இந்தப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கல்வி நிலையத்தின் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஜனவரி 30.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:

Admissions Office,

Indian Institute of Management,
Tiruchirappalli – 620 015.

விவரங்களுக்கு: www.iimtrichy.ac.in

Thursday, October 13, 2011

மத்திய அரசின் கல்வி உதவி


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கல்வி உதவி பெற விரும்புவோரின் மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக அரசால் 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட +2 தேர்வில், குறைந்தபட்சம் 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ 4 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவிகள் விவரம்:-
(1)    இளநிலை பட்டப்படிப்பு (கல்லூரியில் படிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்) முதலாமாண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை மாதம் ரூ. 1000   
(2)    முதுநிலை பட்டப்படிப்பு தொடர விரும்பினாலும், அதற்கும் மாதம் ரூ. 2000   
(3)    பொறியியல் படிப்பவருக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 1000 அதன் பிறகு மாதம் ரூ2000. மேலும் விவரங்களுக்கு, விண்ணப்ப படிவத்திற்கு இங்கே சொடுக்கவும் http://www.tn.gov.in/dge/

--------------------------------------------------------------------------

DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 600 006.

“CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIP FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS”
Applications are invited from eligible students for the award of scholarship under the
above scheme. The candidates who have passed and secured a minimum of 80% of marks
and above in the Higher Secondary Examination held in March 2010, conducted by the State
Board of School Examinations, Tamil Nadu and pursuing FIRST YEAR of higher studies in
2010-2011 (not correspondence or distance mode) are eligible to submit application for getting
scholarship announced by the Ministry of Human Resource Development, Department of
Higher Education, Government of India.

From the applications received, the required number of 4883 applications will be
selected based on merit category wise.

The scholarship will be given @ Rs.1000/- per month at Graduation level for first three
years of College and University courses and Rs.2000/- per month at Post graduation level.
Students pursuing professional courses would get Rs.2000/- per month in the 4
th and 5th year.
The scholarship would be paid for 10 months in an academic year.
The award of scholarship shall be subject to the following conditions:
1. The scholarship shall be awarded to the Indian nationals only.

2. The Undergraduate/Post graduate/Professional courses are pursued in a recognized
college/institution in India.

3. The students should belong to non-creamy layer (Parental income not exceeding Rs.4.5
lakhs per annum) as defined by the Department of Personnel and Training in their
Notification No.36012/22/93-Estt. (SCT), dated 08.11.1993 and as modified vide their
OM No.36033/3/2004-Estt. (Res) dated 09.03.2004 and as may be further modified
from time to time and not availing of any other scholarship scheme.

4. The reservation would be applicable in terms of Central Reservation Policy and internal
earmarking.

5. The scholarship will be distributed amongst Pass outs of the Science, Commerce
Humanities and Vocational Streams in the ratio of 3: 2: 0.5: 0.5 with equal number
among boys and girls.

The Blank application forms can be downloaded by the eligible candidates through
http://www.tn.gov.in/dge on or before 12.11.2010.

The filled-in applications (Annexure III to VI the formats of which are available in this
website) should be submitted to the Joint Director (Hr.Sec.), Directorate of Government
Examinations, DPI Campus, College Road, Chennai – 6 on or before 16.11.2010 either by
Registered or Speed Post.
Needless to mention that this is a provisional offer only and final selection will depend upon
the student satisfying the eligibility criteria and number of scholarships ear-marked for this
Board.
Director of Government
Examinations, Chennai – 6.


--------------------------------------------------------------------------

Learn Astrology

Wednesday, August 3, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 3

           இப்படி நமக்கென்று ஒரு பாரம்பரியமும், வேத, புராணங்களில் அதற்கான சான்றுகளும் காணப்படுகின்றன. ஆகம சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரம் போன்ற சாஸ்திரங்களுக்கு நாம்தான் சொந்தக்காரர்கள். இந்தியாவில், மேற்கூறிய சாஸ்திரங்களை முறையாக கடைபிடித்து வடிவமைக்கப்பட்ட கோவில்களே உலகப்புகழ் வாய்ந்ததாக இருக்கிறது.  இப்படி எல்லாவற்றிலும் மிகச் சிறந்த வல்லுனர்களாக இருந்த நாம், குறிப்பிட்ட சில சமூகத்தினரின் காழ்ப்புணர்ச்சியால், அவர்களுக்கு மன்னர்களிடம் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, அவர்கள் செய்த அரசியலால், நாம் ஒதுக்கப்பட்டோம்.  நம் இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வல்லுனர்கள் கொல்லப்பட்டனர். வரலாறும் இதனை மறைத்து விட்டன. வரலாறு தொல்பொருள் ஆய்வு மூலமே கிடைக்கிறது. பெரும்பாலான கல்வெட்டுகள் அரசர்களின் ஆணையின் படியே எழுதப்பட்டன. அரசர்கள் விஸ்கர்மாக்களின் படுகொலைகளை எவ்வாறு எழுதுவர்? அதனால் நம் இன வரலாறு, கலைக்காக நாம் செய்த தியாகங்கள்  மறைக்கப்பட்டு விட்டன.  நம் இனத்தால் கோவில்கள், அரண்மனைகள் வடிவமைக்கப்பட்டு,  நிர்மாணிக்கப்பட்டவுடன், வேலை முடிந்தவுடன், அவர்களை பொதுமக்கள் முன் பாராட்டுவது போல் பாராட்டி, பரிசுப் பொருட்களை கொடுத்து மறு நாளே அவர்களை கொன்று விடுவார்கள். அதற்கு பயந்து எத்தனையோ குடும்பங்கள் ஊர் விட்டு, ஊர் போய் நாடோடியாக திரிந்தனர். மொத்தத்தில் நம்முடைய அறிவு, தொழில் திறமையை சுரண்டி, காரியம் சாதித்த பின் விலங்கிற்கும் கேவலமாய் நம்மை நடத்தினர். விலங்குகளுக்கு உள்ள ஒரு சுதந்திரம் கூட நமக்கு கிடைக்கவில்லை. வெட்கக்கேடு !

           இதற்கு காரணம், இதைப்போல ஒரு சிறந்த கலைப்படைப்பு வேறு எந்த நாட்டிலும் இருக்கக் கூடாது என்ற அரசர்களுக்கே உரித்தான ஆணவமே ! இந்த கட்டிடக்கலை வல்லுனரை உயிரோடு விட்டால், இதை விட சிறந்த கலைப்படைப்பை வேற நாட்டில் செய்து விடுவார் என்று அவருக்கு அருகில் உள்ள வேறு சமூகத்தினர் போட்டு விட்டதன் விளைவே, விஸ்கர்மா இனத்தின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்தது. ஏனென்றால் தமது இனத்திற்கு இணையாக சாஸ்திரம் அறிந்தவர்கள் இவர்களே என்ற பொறாமை உணர்வும்  காரணமாக இருந்திருக்கலாம். இவர்களை “தாம் வாழ பிறரைக் கெடுத்தவர்கள்” என்று கூறினால் அது மிகையாகாது.

           ஆண் குழந்தைகளைப் பெற்ற தாய் ஆனந்தம் அடைவதற்கு பதில் அழுது புலம்பும் நிலை ஏற்பட்டது. அரசர்கள் நம் இன வாரிசுகளையும் விட்டு வைக்கவில்லை. அதனால் விஸ்கர்மாக்களில் பலர் குடும்பத்தை மறைத்து, குடும்பத்தை விட்டு விலகி  வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற எல்லா சமூகத்தினரும் கூட்டம் கூட்டமாக கூடி வாழ்ந்த போது, நாம் மட்டும் நாடோடி வாழ்க்கை வாழ நேரிட்டது.

           இப்பொழுதும் நீங்கள் காணலாம், ஒரு கிராமத்தில் நூற்றுக்கு ஒரு குடும்பம் மட்டுமே நம் இனத்தினர் இருப்பதைக் காணலாம். மற்ற ஜாதியினர் 40, 50 குடும்பங்கள் இருக்கும். ஏனென்றால் அவர்கள் ஒரே இடத்தில் ஒரே இனமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நம் இன ஆண்கள் அரசர்களுக்கு பயந்து, குடும்பத்தை மறைத்து, குடும்பத்தை விட்டு விலகி, நாடோடியாக வாழ்ந்தமையால் இன்று மக்கள் தொகையில் விஸ்கர்மா இனத்தின் சதவீதம் மிகக்குறைவாகவே உள்ளது.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !
நாயைக் கண்டால் கல்லைக் காணோம் ! 
          என்ற பழமொழியின் பின்புலத்தை ஆரோய்ந்தொமெனில், நம் இனத்தவரின் திறமை விளங்கும். கல்லில் கலைவண்ணத்துடன் நாயின் உருவத்தை செதுக்கியபின், நாயின் உருவத்தைக் காணும்போது, நாயின் தத்ரூபமான உருவம் தான் தெரியுமே தவிர அது ஒரு கல் என்று நினைக்கத் தோன்றாது. அதைப் போல கல்லின் தன்மை, நிறம் போன்றவற்றை காணும் போது அது ஒரு கல்லாகத்தான் தெரியுமே தவிர நாயாகத்தெரியாது. இது தான் இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம்.

இதைப்போல, இனி எந்த கோவிலை கண்டாலும், அதன் அழகை மட்டுமே காணாமல், அதில் மறைந்திருக்கும் நம் இனத்தவரின், திறமை, உழைப்பு, அவர்கள் செய்த உயிர்த் தியாகம் போன்றவற்றையும் மனதில் காணுங்கள். இதுவே நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

           நம்முடைய இனம் ஒரு வஞ்சிக்கப்பட்ட இனம்.

           இன உணர்வு கொள் !! 

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க

Wednesday, July 6, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 1

சாதி பெயரை சொல்லி, எவர் ஒருவரும், சுரண்ட நினைத்தாலோ, சுய நல அரசியல் செய்ய நினைத்தாலோ அது தவறாகும். சேவை செய்ய நினைப்பதில் தவறேதுமில்லை. விமானத்தில் பயணம் செய்யும் பொழுது விபத்து நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று பாதுகாப்பு குறித்து விளக்கம் தருவார்கள். அதில் முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு பிறகு தான் உங்களின் குழந்தைகளை நோக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் பெரியவர்கள் விரைந்து செயல்பட்டால், அவர்களும், அவர்களால் குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள். இதில் எங்கே வந்தது சுய நலம். புத்திசாலித்தனமே உள்ளது, சுய நலம் இல்லை. நெருடல் தேவையில்லை. அதைப்போலவே முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், பிறகு உங்கள் உறவினர்களை பாதுகாக்கவும், உறவினர்கள் என்று வரும்போது ஜாதி வந்துவிடுகிறது. அதன் பின் தாங்கள் சார்ந்த தாய் மொழியினருக்காக ஏதாவது செய்ய இயலுமா என்று பார்க்கவும், பிறகு ஒட்டு மொத்த இந்தியாவுக்காக தாங்கள் ஏதாவது செய்ய இயலுமா என்று முயற்சிக்கலாம். இது ஜாதிக்கு மட்டுமல்ல மதத்திற்கும் பொருந்தும். முதலில் வினாயகர், முருகன், சிவன் முதலிய கடவுளர்க்கு பல வழிபாட்டு பாடல்களைப் பாடிய அருட்பிரகாச வள்ளலார் பிறகு, ஜாதி மதத்தை கடந்து, சமரச சன்மார்க்க நெறியை பரப்ப விழைந்தார். அருட்பெரும் ஜோதியை வழிபட சொல்லி திருவருட்பா அருளினார். இதனை சமயாதீத நிலை என்று கூறுவர். தாயுமானவர் நிலையும் சமயாதீத நிலைதான். ஜாதி, சமயம், சமயாதீதம் என்பது தான் வரிசைக்கிரமம். அதனால் தங்களுக்கு ஏற்பட்ட நெருடல் அவசியம் இல்லாத ஒன்று என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. 

வரப்புயர நெல் உயரும் ! 
நெல் உயர குடி உயரும் ! 
குடி உயர கோன் உயர்வான் ! 
----என்பது ஆன்றோர் வாக்கல்லவா?

மேலும் சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்று தேவநேயப் பாவனர், மறைமலை அடிகளார் போன்ற தனித்தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகப்பொதுமறையாம், தமிழ்த் திருமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் வள்ளுவனே முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்று கூறியுள்ளார்.  இதில் வரும் உலகு என்ற சொல்லானது லோகம் என்ற வட மொழிச்சொல்லின் மரூஉ என்றும், ஆதி, பகவன் என்ற சொற்களும் வட மொழி சொற்களே என்றும் சமஸ்கிருத ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தமிழறிஞர்கள் மறுத்துவருகின்றனர்.  சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்பது அவர்களின் நிலைப்பாடு. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் அகத்தியரின் பிரதம சீடர் ஆவார். தமிழில் அகத்தியர் எழுதிய அகத்தியத்தின், தொடர் நூலே தொல்காப்பியம் என்றும் கூறுவர். இதே அகத்தியர் சமஸ்கிருதத்திற்கும் இலக்கண நூல் எழுதியுள்ளார். 

நான் ஏன் தமிழ் விஸ்கர்மா என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்தேன் என்பதை அறிமுகப் பதிவிலேயே சொல்லியிருப்பேன். தமிழ்மொழியை ஒரு தகவல் பறிமாற்ற உறவுப்பாலமாகவே கருதுகிறேன். வேறு எந்த நோக்கமுமல்ல.

விஸ்கர்மா என்ற சொல் 5 தொழிலுக்கும் பொருந்தும். கொல்லன், தச்சன் என்று பிரிக்கவேண்டாம் என்ற உயர்ந்த நோக்கமும் அதில் அடங்கியுள்ளது. அதனால் நண்பரே வீண் வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நம்முடைய சமூகத்திற்கு தங்களால் இயன்ற சேவையை செய்யுமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.



அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 

Tuesday, February 1, 2011

மருத்துவ உதவிகள்

நோயற்ற வாழ்வே ! குறைவற்ற செல்வம் !

           விஸ்வகர்மா குடும்பத்தில் உள்ள அனைவரையும், தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு (Free Medical Insurance) திட்டததைப் பற்றி எடுத்துச் சொல்லி, காப்பீடு செய்யுமாறு வலியுறுத்துங்கள். அருகில் உள்ள அரசு சுகாதார மையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று, அது குறித்து விவரங்களை சேகரித்து, தேவையான மனுக்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுத்தால், நம் இன மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு கிடைக்கும். நோய்க்கு இலவச வைத்தியங்களை, நல்ல மருத்துவமனைகளில், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் கூட சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். இதைப் படிக்கும் தமிழ் விஸ்வகர்மா அன்பர்கள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை, நமது சமூக மக்களுக்கு, எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தித் தருமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

           சில வியாதிகள் அந்த திட்டத்தில், பட்டியலிடப்படாமல் உள்ளது. அதனை நன்கு அறிந்து, நம் இன மக்களுக்கு எடுத்துச் சொல்லவும். அவ்வாறு, பட்டியலிடப்படாத நோய்க்கு சிகிச்சையளிக்க மறுக்கும்பட்சத்தில், நாம் உதவியாக இருப்போம். இது உறுதி !  குறிப்பாக குழந்தைகள் நலனில், மிகவும் அக்கறை எடுப்போம். வருங்காலம் பிள்ளைகள் கையில், நோயற்ற ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குவது நமது கடமையாகும்!

ஒற்றுமையே உயர்வுக்கு வழி ! 

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க



Wednesday, January 26, 2011

நோக்கம்

           (3) இலவசமாக ஜாதகம் கணித்து, பலன்    
                மற்றும் ஆலோசனை கூறுதல்
           (4) திருமணப் பொருத்தம் பார்த்தல் இலவசம்
           (5) ஏழைகளுக்கான திருமண உதவிகள்
           (6) திருமண அமைப்புகளின் மூலம் வரன்  
                தேடுதல்
           (7) கல்விக்கான இலவச ஆலோசனை 
                 வழங்கல்
           (8) வேலை வாய்ப்புகளைத் தேடி, இலவச 
                ஆலோசனை வழங்கல்
           (9) வேலையில் சேரும்போது, நேர் காணலில்
           (12) இலவச சிறு தொழிற் பயிற்சி
           (13) மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள்
           (14) ஆதரவற்ற முதியவர்களுக்கான 
                  உதவிகள்
           (15) சமுதாய விழிப்புணர்வு
        


மேலும், தமிழ் விஸ்கர்மா சமூகத்திற்கான, உதவிகளிலும், சமூகப் பணிகளிலும் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்ப்பதுவுமே, நமது கடமையாகும்.

அன்பன்
விஸ்வகரன் 
 
tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க