Wednesday, February 9, 2011

சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்


எமது இந்த தமிழ் விஸ்வகர்மா என்ற வலைப் பூவின் நோக்கமே, நமது இனத்திற்கு நற்பணிகள் செய்வதுதான். பிரிந்து கிடக்கும் தமிழ் விஸ்வகர்மா இனத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எமது தலையாய நோக்கமாகும். 
           நற்பணிகளை முதலில் நம் வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும். பொதுவாக நம் இன மக்களிடமும் காணப்படும் ஒரு குறைபாடு என்னவெனில், வேற ஜாதிக்காரங்க கூட நமக்கு உதவுவார்கள், ஆனால் நம் ஆட்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற ஆதங்கம் மனக் குறை எல்லோரிடமும் உள்ளது. அதனால் நாம் முதலில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்ல விதமாக பழக கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடன் சுமூகமான உறவை, அதாவது நல்ல உறவை பேணிக் காக்க வேண்டும்.
           குற்றம் பார்க்கில்; சுற்றம் தேரான்  - என்ற அவ்வையின் வாக்கிற்கு இணங்க, நம்முடைய உறவினர்களை எதெற்கெடுத்தாலும் குற்றம் கூறுவதை தவிர்க்கவும். அவர்களை அன்பால் திருத்த முயற்சிக்கவும். அன்பே சிவம். குறைகளை நாகரீகமாக, அவர்கள் மனம் நோகாமல், எடுத்துச் சொல்ல பழக வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை விட குறைவாக இருந்தாலும், அவர்கள் உதவி என்று கேட்டு வரும்பொழுது, பணத் தேவைக்கான காரணம், மிகவும் நியாயமாக இருந்தால், தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். அடிப்படை தேவைகளுக்கு உதவி செய்வது மிகவும் புண்ணியம். அந்த வாய்ப்பைக் கொடுத்தமைக்காக, நீங்கள் தான் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். 
           அடிப்படைத் தேவை என்றால், பிரசவ செலவு, மருத்துவ செலவு, மழைக் காலங்களில், சரிவர வேலை கிடைக்கவில்லை என்றால் குடும்பச் செலவு, கல்வி உதவி போன்றவைகளே. இவ்வாறு தேவைகளை பகுத்தறிந்து, உதவி செய்ய வேண்டும். அவ்வாறு நாம் உதவவில்லை என்றால் அவர்கள் வேறு ஜாதியினரிடம்தான் போவார்கள்.

அதனால் நாம் செய்ய விரும்பும் நற்பணிகளை முதலில் வீட்டிலிருந்தே தொடங்குவோமாக !  

நம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோமாக !

Charity begins at HOME !


ஒற்றுமையே உயர்வுக்கு வழி !
அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 


1 comment:

ravichandran said...

dear sir; please see my website ; www.ravichainthrin.com