சாதி பெயரை சொல்லி, எவர் ஒருவரும், சுரண்ட நினைத்தாலோ, சுய நல அரசியல் செய்ய நினைத்தாலோ அது தவறாகும். சேவை செய்ய நினைப்பதில் தவறேதுமில்லை. விமானத்தில் பயணம் செய்யும் பொழுது விபத்து நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று பாதுகாப்பு குறித்து விளக்கம் தருவார்கள். அதில் முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு பிறகு தான் உங்களின் குழந்தைகளை நோக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் பெரியவர்கள் விரைந்து செயல்பட்டால், அவர்களும், அவர்களால் குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள். இதில் எங்கே வந்தது சுய நலம். புத்திசாலித்தனமே உள்ளது, சுய நலம் இல்லை. நெருடல் தேவையில்லை. அதைப்போலவே முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், பிறகு உங்கள் உறவினர்களை பாதுகாக்கவும், உறவினர்கள் என்று வரும்போது ஜாதி வந்துவிடுகிறது. அதன் பின் தாங்கள் சார்ந்த தாய் மொழியினருக்காக ஏதாவது செய்ய இயலுமா என்று பார்க்கவும், பிறகு ஒட்டு மொத்த இந்தியாவுக்காக தாங்கள் ஏதாவது செய்ய இயலுமா என்று முயற்சிக்கலாம். இது ஜாதிக்கு மட்டுமல்ல மதத்திற்கும் பொருந்தும். முதலில் வினாயகர், முருகன், சிவன் முதலிய கடவுளர்க்கு பல வழிபாட்டு பாடல்களைப் பாடிய அருட்பிரகாச வள்ளலார் பிறகு, ஜாதி மதத்தை கடந்து, சமரச சன்மார்க்க நெறியை பரப்ப விழைந்தார். அருட்பெரும் ஜோதியை வழிபட சொல்லி திருவருட்பா அருளினார். இதனை சமயாதீத நிலை என்று கூறுவர். தாயுமானவர் நிலையும் சமயாதீத நிலைதான். ஜாதி, சமயம், சமயாதீதம் என்பது தான் வரிசைக்கிரமம். அதனால் தங்களுக்கு ஏற்பட்ட நெருடல் அவசியம் இல்லாத ஒன்று என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.
வரப்புயர நெல் உயரும் !
நெல் உயர குடி உயரும் !
குடி உயர கோன் உயர்வான் !
----என்பது ஆன்றோர் வாக்கல்லவா?
மேலும் சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்று தேவநேயப் பாவனர், மறைமலை அடிகளார் போன்ற தனித்தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகப்பொதுமறையாம், தமிழ்த் திருமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் வள்ளுவனே முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்று கூறியுள்ளார். இதில் வரும் உலகு என்ற சொல்லானது லோகம் என்ற வட மொழிச்சொல்லின் மரூஉ என்றும், ஆதி, பகவன் என்ற சொற்களும் வட மொழி சொற்களே என்றும் சமஸ்கிருத ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தமிழறிஞர்கள் மறுத்துவருகின்றனர். சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்பது அவர்களின் நிலைப்பாடு. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் அகத்தியரின் பிரதம சீடர் ஆவார். தமிழில் அகத்தியர் எழுதிய அகத்தியத்தின், தொடர் நூலே தொல்காப்பியம் என்றும் கூறுவர். இதே அகத்தியர் சமஸ்கிருதத்திற்கும் இலக்கண நூல் எழுதியுள்ளார்.
நான் ஏன் தமிழ் விஸ்கர்மா என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்தேன் என்பதை அறிமுகப் பதிவிலேயே சொல்லியிருப்பேன். தமிழ்மொழியை ஒரு தகவல் பறிமாற்ற உறவுப்பாலமாகவே கருதுகிறேன். வேறு எந்த நோக்கமுமல்ல.
விஸ்கர்மா என்ற சொல் 5 தொழிலுக்கும் பொருந்தும். கொல்லன், தச்சன் என்று பிரிக்கவேண்டாம் என்ற உயர்ந்த நோக்கமும் அதில் அடங்கியுள்ளது. அதனால் நண்பரே வீண் வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நம்முடைய சமூகத்திற்கு தங்களால் இயன்ற சேவையை செய்யுமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
அன்பன்
விஸ்வகரன்
ஜோதிடம் கற்க
Showing posts with label carpenter. Show all posts
Showing posts with label carpenter. Show all posts
Wednesday, July 6, 2011
தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 1
Wednesday, February 9, 2011
சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
எமது இந்த தமிழ் விஸ்வகர்மா என்ற வலைப் பூவின் நோக்கமே, நமது இனத்திற்கு நற்பணிகள் செய்வதுதான். பிரிந்து கிடக்கும் தமிழ் விஸ்வகர்மா இனத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எமது தலையாய நோக்கமாகும்.
நற்பணிகளை முதலில் நம் வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும். பொதுவாக நம் இன மக்களிடமும் காணப்படும் ஒரு குறைபாடு என்னவெனில், வேற ஜாதிக்காரங்க கூட நமக்கு உதவுவார்கள், ஆனால் நம் ஆட்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற ஆதங்கம் மனக் குறை எல்லோரிடமும் உள்ளது. அதனால் நாம் முதலில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்ல விதமாக பழக கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடன் சுமூகமான உறவை, அதாவது நல்ல உறவை பேணிக் காக்க வேண்டும்.
குற்றம் பார்க்கில்; சுற்றம் தேரான் - என்ற அவ்வையின் வாக்கிற்கு இணங்க, நம்முடைய உறவினர்களை எதெற்கெடுத்தாலும் குற்றம் கூறுவதை தவிர்க்கவும். அவர்களை அன்பால் திருத்த முயற்சிக்கவும். அன்பே சிவம். குறைகளை நாகரீகமாக, அவர்கள் மனம் நோகாமல், எடுத்துச் சொல்ல பழக வேண்டும். பொருளாதார ரீதியில் தங்களை விட குறைவாக இருந்தாலும், அவர்கள் உதவி என்று கேட்டு வரும்பொழுது, பணத் தேவைக்கான காரணம், மிகவும் நியாயமாக இருந்தால், தங்களால் இயன்ற உதவியை செய்யலாம். அடிப்படை தேவைகளுக்கு உதவி செய்வது மிகவும் புண்ணியம். அந்த வாய்ப்பைக் கொடுத்தமைக்காக, நீங்கள் தான் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
அடிப்படைத் தேவை என்றால், பிரசவ செலவு, மருத்துவ செலவு, மழைக் காலங்களில், சரிவர வேலை கிடைக்கவில்லை என்றால் குடும்பச் செலவு, கல்வி உதவி போன்றவைகளே. இவ்வாறு தேவைகளை பகுத்தறிந்து, உதவி செய்ய வேண்டும். அவ்வாறு நாம் உதவவில்லை என்றால் அவர்கள் வேறு ஜாதியினரிடம்தான் போவார்கள்.
அதனால் நாம் செய்ய விரும்பும் நற்பணிகளை முதலில் வீட்டிலிருந்தே தொடங்குவோமாக !
நம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோமாக !
Charity begins at HOME !
Labels:
blacksmith,
carpenter,
goldsmith,
kammalan,
silpi
Subscribe to:
Posts (Atom)