Showing posts with label தச்சர். Show all posts
Showing posts with label தச்சர். Show all posts

Wednesday, July 6, 2011

தமிழ் விஸ்வகர்மா - விளக்கம் 1

சாதி பெயரை சொல்லி, எவர் ஒருவரும், சுரண்ட நினைத்தாலோ, சுய நல அரசியல் செய்ய நினைத்தாலோ அது தவறாகும். சேவை செய்ய நினைப்பதில் தவறேதுமில்லை. விமானத்தில் பயணம் செய்யும் பொழுது விபத்து நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று பாதுகாப்பு குறித்து விளக்கம் தருவார்கள். அதில் முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு பிறகு தான் உங்களின் குழந்தைகளை நோக்க வேண்டும் என்பார்கள். ஏனெனில் பெரியவர்கள் விரைந்து செயல்பட்டால், அவர்களும், அவர்களால் குழந்தைகளும் பாதுகாக்கப்படுவார்கள். இதில் எங்கே வந்தது சுய நலம். புத்திசாலித்தனமே உள்ளது, சுய நலம் இல்லை. நெருடல் தேவையில்லை. அதைப்போலவே முதலில் உங்களை பாதுகாத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், பிறகு உங்கள் உறவினர்களை பாதுகாக்கவும், உறவினர்கள் என்று வரும்போது ஜாதி வந்துவிடுகிறது. அதன் பின் தாங்கள் சார்ந்த தாய் மொழியினருக்காக ஏதாவது செய்ய இயலுமா என்று பார்க்கவும், பிறகு ஒட்டு மொத்த இந்தியாவுக்காக தாங்கள் ஏதாவது செய்ய இயலுமா என்று முயற்சிக்கலாம். இது ஜாதிக்கு மட்டுமல்ல மதத்திற்கும் பொருந்தும். முதலில் வினாயகர், முருகன், சிவன் முதலிய கடவுளர்க்கு பல வழிபாட்டு பாடல்களைப் பாடிய அருட்பிரகாச வள்ளலார் பிறகு, ஜாதி மதத்தை கடந்து, சமரச சன்மார்க்க நெறியை பரப்ப விழைந்தார். அருட்பெரும் ஜோதியை வழிபட சொல்லி திருவருட்பா அருளினார். இதனை சமயாதீத நிலை என்று கூறுவர். தாயுமானவர் நிலையும் சமயாதீத நிலைதான். ஜாதி, சமயம், சமயாதீதம் என்பது தான் வரிசைக்கிரமம். அதனால் தங்களுக்கு ஏற்பட்ட நெருடல் அவசியம் இல்லாத ஒன்று என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. 

வரப்புயர நெல் உயரும் ! 
நெல் உயர குடி உயரும் ! 
குடி உயர கோன் உயர்வான் ! 
----என்பது ஆன்றோர் வாக்கல்லவா?

மேலும் சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்று தேவநேயப் பாவனர், மறைமலை அடிகளார் போன்ற தனித்தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகப்பொதுமறையாம், தமிழ்த் திருமறையாம் திருக்குறளை எழுதிய அய்யன் வள்ளுவனே முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என்று கூறியுள்ளார்.  இதில் வரும் உலகு என்ற சொல்லானது லோகம் என்ற வட மொழிச்சொல்லின் மரூஉ என்றும், ஆதி, பகவன் என்ற சொற்களும் வட மொழி சொற்களே என்றும் சமஸ்கிருத ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை தமிழறிஞர்கள் மறுத்துவருகின்றனர்.  சமஸ்கிருதம் என்பதே தமிழிலிருந்து வந்த மொழிதான் என்பது அவர்களின் நிலைப்பாடு. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் அகத்தியரின் பிரதம சீடர் ஆவார். தமிழில் அகத்தியர் எழுதிய அகத்தியத்தின், தொடர் நூலே தொல்காப்பியம் என்றும் கூறுவர். இதே அகத்தியர் சமஸ்கிருதத்திற்கும் இலக்கண நூல் எழுதியுள்ளார். 

நான் ஏன் தமிழ் விஸ்கர்மா என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்தேன் என்பதை அறிமுகப் பதிவிலேயே சொல்லியிருப்பேன். தமிழ்மொழியை ஒரு தகவல் பறிமாற்ற உறவுப்பாலமாகவே கருதுகிறேன். வேறு எந்த நோக்கமுமல்ல.

விஸ்கர்மா என்ற சொல் 5 தொழிலுக்கும் பொருந்தும். கொல்லன், தச்சன் என்று பிரிக்கவேண்டாம் என்ற உயர்ந்த நோக்கமும் அதில் அடங்கியுள்ளது. அதனால் நண்பரே வீண் வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நம்முடைய சமூகத்திற்கு தங்களால் இயன்ற சேவையை செய்யுமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.



அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க 

Monday, February 21, 2011

நேர் காணலில் வெற்றி பெற பயிற்சி



           தமிழ் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த படித்த, வேலை தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு, நேர் காணலில் வெற்றி பெற  பயிற்சி அளிக்கிறோம். பெரும்பாலும் நம்முடைய இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ் வழிக் கல்வியிலேயே, பள்ளிப் படிப்பு  மற்றும் கல்லூரி படிப்பை முடித்து இருப்பார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்களும், ஆங்கிலத்தில் பேச இயலாத நிலையில் இருப்பார்கள். இதனால், நம் தமிழ் விஸ்வகர்மா இன இளைஞர்கள்,  உலகத் தரத்தில் ஆங்கிலம் பேச இயலாமலும் உள்ளார்கள். மேலும் அவர்களுக்கு, நேர் காணலில் வெற்றி பெறுவதென்பது ஒரு கடின முயற்சியே. நாங்கள் அவர்களுக்கு, ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எப்படியென்றும், நேர் காணலில் வெற்றி பெறுவது எப்படியென்றும் பயிற்சியளிக்கிறோம்.

           நேர்காணலுக்கு தயாராகும் இளைஞர்கள், வேலைத் தேடும் இளைஞர்கள் அவர்களின் படிப்பு பற்றிய விவரங்களையும், எந்த தொழிற்பிரிவில் வேலை செய்யும் ஆர்வம், ஆற்றல் உள்ளது என்பதையும் எங்களுக்கு தெரிவித்தால், நாங்கள் அதற்கேற்ப உங்களுக்கு பயிற்சியை அளிக்கிறோம். எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினால், உங்கள் துறையைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை உங்களுக்கு வழங்குகிறோம்.  அவசியம் ஏற்பட்டால், நேரடி பயிற்சியையும் அளிக்கிறோம்.

           தமிழ் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்த படித்த, வேலை தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்த பதிவை படிப்பவர்கள் அருகில் உள்ள நம் இன இளைஞர்களுக்கு இந்த செய்தியை அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அன்புடன்
விஸ்வகரன்
tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க 

Saturday, February 5, 2011

வேலை

தமிழ் விஸ்கர்மா இன மக்களுக்கு, வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தர, உருவாக்கித் தர பாடுபடுவோம். வேலை பற்றிய அறிவிப்பு எங்கு வந்தாலும், அதனை நம் சமூக மக்களின் நலன் கருதி இவ்வலைபூவின் வாயிலாக வெளியிடுவோம். அதனால் நம் இன மக்கள் தொடர்ந்து இங்கு வருகை தந்து, வேலை வாய்ப்பு அறிவிப்புகளை படித்து அதனை நம்மவர்களிடம் பகிர்ந்துகொள்ளுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். உதாரணத்திற்கு இன்று (06 பிப்ரவரி 2001) தினமலர் நாளிதழில் வந்த ஒரு வேலை வாய்ப்பு செய்தியைத் தருகிறோம்.

பெரம்பலூர்: பெரம்பலூர்மாவட்ட கலெக்டர் விஜயகுமார்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது:ஓமன் நாட்டிலுள்ள முன்னனி நிறுவனத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 22 முதல் 28 வயதிற்குட்பட்ட பொதுப்பணியாளர்கள் உடனடியாக தேவைப்படுகின்ற னர். தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதி யும் உள்ளவர்கள் தங்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் பாஸ்போர்ட் போன்றவற்றின் ஒரிஜினல் மற்றும் அதன் நகல்கள், நீலநிறப்பின்னனியில் எடுக்கப்பட்ட5 ஃபோட்டோக்கள் ஆகியவற்றுடன் எண் 48 டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு ,சென்னை -600020 என்ற முகவரி அமைந்துள்ள தமிழக நிறுவனமான அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் இன்று7ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் இன்டர்வியூக்கு வரவேண்டும்.மேலும் விபரங்கள் அறிய இந்நிறுவன தொலைபேசி எண்கள்-044.24464268, 24464269 மற்றும் மொபைல் 9940393617, 9952940460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் இந்தவாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர் 06 பிப்ரவரி 2011

தமிழ் விஸ்வகர்மா சமூகப் பணி தொடரும்!
ஒற்றுமையே உயர்வு தரும் !

அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க