Monday, January 9, 2012

உயர் கல்வி


உதவித் தொகையுடன் மேனேஜ்மெண்ட் ஆராய்ச்சிப் படிப்பு
திருச்சியில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.


திருச்சியில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிலையத்தில் மேனேஜ்மெண்ட் முழுநேர ஆராய்ச்சிப் படிப்பு (ஃபெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மெண்ட் - ஐந்து ஆண்டு) தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும் BE, B.Tech, B.Arch போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைந்தபட்சம் 21 மாதங்கள் படிப்பு சம்பந்தமாக ஏதேனும் ஒரு துறையில் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேனேஜ்மெண்ட் அல்லாத வேறு ஏதேனும் ஒரு படிப்பில் முதுநிலை பட்டப் படிப்பு படித்திருக்கும் மாணவர்கள் 21 மாதங்கள்  அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை மருத்துவப் படிப்பு படித்திருக்கும் மாணவர்களும் இந்த மேலாண்மை ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

2011
ஆம் ஆண்டு நடத்தப்பட்ட  ஜிமேட், கேட், ஜி.ஆர்.இ.  போன்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
உதவித் தொகை
எஃப்.பி.எம். (Fellow in Programme Managment) படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம், தங்கும் செலவு, புத்தகம் மற்றும் இதரச் செலவுகளுக்காக ஓர் ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஓர் ஆண்டுக்கு வழங்கப்படும். கல்வி வளாகத்தில் தங்கியிருந்து படிக்காமல், கல்வி வளாகத்திற்கு வெளியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும். இதுதவிர மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் இதரச் செலவுகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இந்த உதவித்தொகை, மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இந்தப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கல்வி நிலையத்தின் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஜனவரி 30.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:

Admissions Office,

Indian Institute of Management,
Tiruchirappalli – 620 015.

விவரங்களுக்கு: www.iimtrichy.ac.in

No comments: