Showing posts with label கார்பென்டர். Show all posts
Showing posts with label கார்பென்டர். Show all posts

Sunday, February 6, 2011

திருமணப் பொருத்தம்

           தமிழ் விஸ்வகர்மாவைச் சேர்ந்த மண மக்களுக்கு சேவை கட்டணமின்றி திருமணப் பொருத்தம், கணித்து அனுப்பி வைக்கப்படும். பொதுவாக பார்க்கப்படும் 10 பொருத்தங்கள், மணமகள் மற்றும் மணமகனின் நட்சத்திரங்களை வைத்து பார்ப்பதாகும். பெரும்பாலான ஜோதிடர்கள், இதுவே போதுமானது என்று கூறிவிடுகிறார்கள். ஆனால், 10 பொருத்தங்களுடன், அவர்களின் ஜாதகங்களும் பொருந்துகிறதா என்று பார்ப்பதே சிறந்த முறையாகும். ஜாதகங்களை வைத்து பொருத்தம் பார்க்கும் பொழுது தான், அவர்களுடைய ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா என்று ஆராய்ந்து, அதற்கேற்ப பொருந்துகிறதா என்று பார்க்க முடியும். அதனால் ஆயிரங்காலத்து பயிரான திருமண வாழ்க்கைக்கு முறையாக பொருத்தம் பார்ப்பதால், திருமண வாழ்க்கையில் வரும் பல இடர்ப்பாடுகளைக் களைந்து, வாழ்க்கையை இன்பகரமானதாகவும், வளமானதாகவும் அமைக்க இயலும். 

இருவரின் ஜாதகம் கணிக்க :
           மணமக்களின் ஜாதகம் கணிக்க பின் வரும் விவரங்கள் அவசியமாகும். துல்லியமான கணிதத்திற்கு, பின் வரும் விவரங்கள் மிகவும் அவசியமாகும்.
மணமகளின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மணமகனின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மேலே குறிப்பிட்ட விவரங்களை எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினால், திருமணப் பொருத்தம் சேவை கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படும்.

ஒற்றுமையே உயர்வுக்கு வழி !

அன்பன்
விஸ்வகரன்
மின் அஞ்சல் : tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க