Showing posts with label ஆச்சாரி. Show all posts
Showing posts with label ஆச்சாரி. Show all posts

Sunday, September 11, 2011

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்

விஸ்வகர்மா அன்பர்களுக்கு வணக்கம் !

வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் பல உள்ளன. குறிப்பாக அபுதாபியில் (யு.ஏ.இ.) உள்ள பணியிடங்களுக்காக தற்பொழுது நேர்காணல் மும்பாயில் நடை பெற்று வருகிறது. 21 செப்டம்பர் 2011 வரை நேர்காணல் நடைபெறும் என்று தெரிய வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் மும்பையில் கீழ்க்காணும் முகவரியில் உள்ள அம்பே  இண்டர்னேஷனல் என்ற ஏஜெண்ட்டை அணுகவும். இந்த ஏஜெண்ட் எனக்குத் தெரிந்த வரையில் கடந்த 20 ஆண்டுகளாக எந்த ஒரு சிறு பிரச்சினையும் இல்லாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆள் எடுத்து வருகிறார்கள். சேவை கட்டணமும் குறைவாகவே இருக்கும்.இப்பொழுது இவர்கள் அபுதாபியில் உள்ள CCC (Consolidated Contractors Company – Abu Dhabi) என்ற ஒரு மல்டினேஷனல் கம்பெனிக்கு ஆள் எடுக்கிறார்கள்.

மெக்கானிக்கல் தொடர்பான வேலை விபரம்:

S/NO. JOB TITLE
1 C/H WELDING
2 WELDER - GTAW/SMAW
3 WELDER - GTAW
4 WELDER - SMAW
5 F/M HYDROTESTING
6 F/M PAINTING, BLASTING
7 F/M PIPING
8 F/M RIGGING
9 F/M STEEL STRUCTURAL ERECTION
10 F/M WELDING
11 G/F PIPING
12 G/F WELDING / SUPERVISOR
13 JOB PERFORMER (MECH)
14 STORE KEEPER MECHANICAL
15 SUPERINTENDENT PIPING
16 SUPERVISOR FABRICATION
17 SUPERVISOR PAINTING
18 SUPERVISOR PIPING
19 SUPERVISOR STEEL STRUCTURAL / ERECTION
20 SUPERVISOR WELDING
21 C/H  STRL STEEL ERECTION
22 C/H PIPING
23 C/H STEEL STRUCTURAL
24 GRP LAMINATOR
25 WRAPPER / SHRINK SLEEVES
26 MECH HELPER / GRINDER
27 PIPE  FABRICATOR
28 PIPE FITTER /LAYER
29 STEEL ERECTOR / STRL FITTER
30 STRL STEEL FABRICATOR








எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ருமெண்டேஷன்




S/NO. JOB TITLE
1 F/M ELECTRICAL
2 F/M INSTRUMENT
3 F/M INSTRUMENTATION
4 JOB PERFORMER (E&I)
6 SUPERVISOR E&I
7 C/H ELECTRICAL
8 C/H ELECTRICAL FITTER / CONDUIT FITTER
9 C/H FABRICATION
10 C/H INSTRUMENTS
11 CABLE JOINTER
12 CABLE SPLICER
13 ELECTRICAL / CONDUITE FITTER
14 ELECTRICIAN  (LTG/EARTH/CABLE)
15 ELECTRICIAN  (TERMINATION)
16 ELECTRICIAN  ASST
17 FABRICATOR
18 INSTRUMENT FITTER ASSISTANT
19 INSTRUMENT TECHNICIAN  (CALIBRATION)
20 INSTRUMENT TECHNICIAN  (INSTALLATION)
21 INSTRUMENT TECHNICIAN  (TERMINATION)
22 INSTRUMENT TECHNICIAN ASST
23 LABOUR/HELPER
24 TRAY FITTER
25 TUBING FITTER
26 WELDER  BRAZING

AMBE INTERNATIONAL
507,Shah and Nahar Industrial Estate
Dr. E’Moses Road,
Next to Toyota Show room,
Worli Naka , Mumbai 4000 18.


குறிப்பு: 


இந்த செய்தி தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையிலேயே வெளியிடப்படுகிறது. வேறு எந்த மறைவான நோக்கமும் இல்லை. இது தொடர்பான எந்த விஷயத்திற்கும், நாங்கள் பொறுப்பல்ல.


அன்பன்
விஸ்வகரன்
tamizhviswakarma@gmail.com

Learn Astrology

Sunday, February 6, 2011

திருமணப் பொருத்தம்

           தமிழ் விஸ்வகர்மாவைச் சேர்ந்த மண மக்களுக்கு சேவை கட்டணமின்றி திருமணப் பொருத்தம், கணித்து அனுப்பி வைக்கப்படும். பொதுவாக பார்க்கப்படும் 10 பொருத்தங்கள், மணமகள் மற்றும் மணமகனின் நட்சத்திரங்களை வைத்து பார்ப்பதாகும். பெரும்பாலான ஜோதிடர்கள், இதுவே போதுமானது என்று கூறிவிடுகிறார்கள். ஆனால், 10 பொருத்தங்களுடன், அவர்களின் ஜாதகங்களும் பொருந்துகிறதா என்று பார்ப்பதே சிறந்த முறையாகும். ஜாதகங்களை வைத்து பொருத்தம் பார்க்கும் பொழுது தான், அவர்களுடைய ஜாதகத்தில் ஏதாவது தோஷம் உள்ளதா என்று ஆராய்ந்து, அதற்கேற்ப பொருந்துகிறதா என்று பார்க்க முடியும். அதனால் ஆயிரங்காலத்து பயிரான திருமண வாழ்க்கைக்கு முறையாக பொருத்தம் பார்ப்பதால், திருமண வாழ்க்கையில் வரும் பல இடர்ப்பாடுகளைக் களைந்து, வாழ்க்கையை இன்பகரமானதாகவும், வளமானதாகவும் அமைக்க இயலும். 

இருவரின் ஜாதகம் கணிக்க :
           மணமக்களின் ஜாதகம் கணிக்க பின் வரும் விவரங்கள் அவசியமாகும். துல்லியமான கணிதத்திற்கு, பின் வரும் விவரங்கள் மிகவும் அவசியமாகும்.
மணமகளின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மணமகனின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மேலே குறிப்பிட்ட விவரங்களை எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினால், திருமணப் பொருத்தம் சேவை கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படும்.

ஒற்றுமையே உயர்வுக்கு வழி !

அன்பன்
விஸ்வகரன்
மின் அஞ்சல் : tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க



சேவை கட்டணமின்றி ஜாதகம்

           தமிழ் விஸ்கர்மா சமூகத்தைச் சேர்ந்த நம் இன மக்களுக்கு, சேவை கட்டணமின்றி ஜாதகம் கணித்து, பலன்கள் அனுப்பி வைக்கப்படும்.

ஜாதகம் கணிக்க :
           ஜாதகம் கணிக்க பின் வரும் விவரங்கள் அவசியமாகும். துல்லியமான கணிதத்திற்கு, பின் வரும் விவரங்கள் மிகவும் அவசியமாகும்.
ஜாதகரின் பெயர்  :
பிறந்த தேதி          :                    ( நாள், மாதம், வருடம் )
பிறந்த நேரம்        :                    ( மணி, நிமிடம், பகல் / இரவு)
பிறந்த இடம்         :                    ( ஊரின் பெயர், மாவட்டம், மாநிலம், நாடு )

மேலே குறிப்பிடப்பட்ட விவரங்களை எங்களுக்கு மின் அஞ்சல் செய்தால் போதும், ஜாதகம் கணித்து அனுப்பப்படும். நாங்கள் தமிழில் கணித்து அனுப்பும் ஜாதகம்,   பின் வரும் விவரங்களுடன் இருப்பதால், அனைவருக்கும் எளிதில் புரியும்.
1. இராசி சக்கரம்
2. நவாம்ச சக்கரம்
3. கிரக ஸ்புட அட்டவணை
4. தசா புத்தி விவரம்
5. ஏழரைச் சனியின் விவரம்

ஜாதக பலன் அறிய :
           ஜாதகத்திற்குரிய பலன்களை தமிழ் விஸ்வகர்மா மக்களுக்கு, சேவை கட்டணமின்றி அனுப்பி வருகிறோம். விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் அறிய வேண்டிய பலனை அல்லது உங்கள் பிரச்சனை என்ன என்பதை ஒரு கேள்வியாக எங்களுக்கு மின் அஞ்சல் செய்து கேட்டால், உங்கள் ஜாதகத்தை நன்கு ஆராய்ச்சி செய்து, அதற்குரிய பதில் தரப்படும். (நேரமின்மை காரணமாக, ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் தரப்படும்)

ஒற்றுமையே உயர்வுக்கு வழி !

அன்பன்
விஸ்வகரன்
மின் அஞ்சல்: tamizhviswakarma@gmail.com



ஜாதகம் கற்க




Sunday, January 30, 2011

ஜாதி அடையாளம் தேவையா?

தமிழ் விஸ்வகர்மா அன்பர்களே !

           ஜாதி அடையாளம் நமக்குத் தேவையா? என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடியிருக்கிறாரே ! என்றும் பாரதியை, நினைவுபடுத்தினார். பிராமண குலத்தில் பிறந்த, பாரதியார் அவ்வாறு பாடியமைக்காக அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. குடிக்க கஞ்சி இல்லாமல், உடுத்த துணியில்லாமல், உள்ளூரில் வசிக்க இயலாமல், உற்றார் உறவினர் அவரை வெறுத்து ஒதுக்கியதால் அவர் அடைந்த கஷ்டங்கள், எண்ணிலடங்காது ! பாரதி பாடி நூறு ஆண்டுகளுக்கும் மேலாகியும், இன்னும் மத்திய, மாநில அரசுகளில், பிராம்மணர்கள் முக்கிய பதவியில் உள்ளனர். அம்பேத்காரின், போராட்டமும், சட்ட உருவாக்கமும், அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருந்தும், அவர்கள் எப்படி முக்கிய பொறுப்புகளில் இன்னும் உள்ளனர், அது தான் அவர்களின் ஒற்றுமை. இன்றும் பத்திரிக்கை துறைகளில், அவர்கள் எழுதுவது தான் செய்தி, ஆனையை பூனை ஆக்குவார்கள், பூனையை ஆனையாகவும் ஆக்குவார்கள்.

           நமக்கெல்லாம் தெரிந்த ஒரு விஷயத்தை வைத்து, இந்த தலைப்பை ஆராயலாம். அதிக சம்பளமும், கவுரமும், மரியாதையும், அரசாங்கத்தில், மிகவும் உயர் பதவி என்றும், அமெரிக்க விண்வெளி மைய நாஸா விஞ்ஞானியை எல்லோரும் போற்றுவார்கள். அதைப் போன்ற ஒரு அமைப்பே, அதற்கு எந்த வகையிலும் குறையாத சொந்த விஞ்ஞானிகளைக்  கொண்ட அமைப்பே நமது இந்தியாவின், பெருமை மிகு, விண்வெளி ஆராய்ச்சி மையம் “இஸ்ரோ” ஆகும்.

           இஸ்ரோவில் சேர வேண்டும் எனில், கல்வித் தகுதியுடன், அறிவு ஜீவியாகவும், ஆராய்ச்சியில் ஈடுபாடும் உடையவர் தான், பல சோதனைத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, முதலில் துணை விஞ்ஞானியாக  சேர முடியும். பிறகு படிப்படியாக உங்கள் திறமை, அனுபவம், கொடுக்கப்பட்ட வேலையில் வெற்றி பெற்று, சாதித்தால் தான், துணை விஞ்ஞானியாக இருந்து பிறகு விஞ்ஞானியாக முடியும். அவரே ஒரு சேர்மன் பதவிக்கு வர வேண்டும் என்றால், குறைந்தது 20 வருடங்களாகும். அப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருந்த மாதவன் நாயர், தன் ஜாதி அடையாளங்களை விட்டாரா? அவர் பெயரை வைத்தே அவர், ஜாதியையும், அவர் சார்ந்த மாநிலததையும், எல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறது.

           100 வருடங்களுக்கு முன்பு வரை, நாயர் ஜாதியினர் எப்படி, சீரழிந்து, தென்னிந்தியாவின் கலாசாரத்தை எப்படி சீரழித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாறு அறிந்த எல்லோருக்கும் தெரியும். மேலும், நாயர்களின் வரலாற்றை, தெரிந்து கொள்ள விரும்புபவர்கள். இந்த பதிவின் கீழே கொடுத்துள்ள லிங்க்-ஐ கிளிக்கினால் போதும். இப்பொதே, கிளிக் செய்ய போய்விடாதீர்கள். சற்று பொறுமையாக, இந்த பதிவை முழுவதும், படித்துவிட்டு பின்பு செல்லலாம்.
         
           எனக்கு தனிப்பட்ட முறையில், யாரோடும் பிணக்கோ அல்லது எந்த ஜாதியோடும் துவேஷமோ அல்ல. நம்முடைய, தமிழ் விஸ்வகர்மாவைச் சார்ந்த ஒரு இளைஞருக்காகவே இந்த பதிவை எழுதுகிறேன். அவர் இதனைப் படித்து, தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள வேண்டும், விஸ்வகர்மா என்று சொன்னால் கேவலம் என்ற தன்னுடைய, தாழ்வு மனப்பாண்மையை போக்க வேண்டும் என்ற ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகவே இதனை படிக்கும் அன்பர்கள் கருத வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

           அப்படி கேடு கெட்ட ஒரு ஜாதியில் பிறந்து, மிகப் பெரிய பதவியை அடைந்தாலும், அவர்கள் தன் ஜாதியை விட்டுக் கொடுக்காமல் இன்றும் தன் பெயர் நிலைக்குமாறு, தன் பெயரில் ஜாதி நிலைக்குமாறு ஒவ்வொரு செயலையும் செய்து வருகிறார்கள்.

           இன்னும் பல உதாரணங்கள் உண்டு அன்பர்களே! இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ், நடிகை நவ்யா நாயர், நம்பியார் என்று இந்த பட்டியல் நீளும் ...

           அதனால், அன்பர்களே ! பெருமை மிகு ஜாதியாம் விஸ்வகர்மாவில் பிறந்ததற்காக பெருமைப்படுங்கள். நாம் கோவில், கட்டினால் தான், சிலை செய்தால் தான், அய்யர் அர்ச்சனை செய்ய முடியும். இந்த உலகத்தைப் படைத்தவரே, நம் விஸ்வகர்மாதான் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. விஷ்னுவின் கையில் உள்ள சக்கராயுதத்தை, வடிவமைத்து செயல்படுத்தி காட்டிய பெருமை, நமக்கே உரியது என்று, விஷ்னு புராணம் சொல்லுகிறது.

           உலக அளவில் இருந்து, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவைப் பார்க்க வந்த, சுற்றுலா பயணிகளினால்  நமது நாட்டிற்கு கிடைத்த அன்னிய வரவு ரூ 50, 000 கோடி. அவர்கள், நம் முன்னோர்களின் (விஸ்கர்மா) திறமையையும், தொழில் நுட்பத்தையும் கண்டு, எண்ணி எண்ணி வியப்படைகிறார்கள். அவ்வளவு பெருமை மிகு இனமாம், நம் விஸ்கர்மா இனம்.

          திருமணம், நல்லது கெட்டது போன்ற விஷயங்களில் மட்டுமே, நம்முடைய ஜாதி அடையாளத்தைத் தேடுகிறோம். மற்ற நேரங்களில், வசதியாக நாம் மறந்து விடுகிறோம். எங்களுடைய மதத்தில் சேர்ந்தால், ஜாதி பாகுபாடு பார்க்க மாட்டோம், அனைவரும் சமம் என்று சொல்லி, பாவப்பட்ட தலித்துகளை மதம் மாற்றுகிறார்கள். ஆனால் மதம் மாறியவுடன், மதத் தலைவர்கள், வேலை முடிந்தது என்று கழன்றுவிடுகிறார்கள். கடந்த வாரம், திருநெல்வேலியில், 3000 தலித் கிறிஸ்துவர்கள் ஜாதி அடிப்படையில், இட ஒதுக்கீடு வேண்டும் என்று  போராடி, தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்கள். சாதி வேண்டாம் என்று சொல்லி மதம் மாறியவர்கள் கூட ஜாதியை விடவில்லை. இன்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாடார் இனம் உள்ளது. இந்து நாடார், கிறிஸ்துவ நாடார். ஜாதியை விட்ட பாடில்லை. நாம் மட்டும் ஏன் விட வேண்டும்.

           இப்பொழுது கூறுகிறேன் என்ன விஷயம் என்று, தமிழ் விஸ்வகர்மா இளைஞருக்கு, நம் சார்பாக, தமிழ் விஸ்வகர்மா என்ற மின்னஞ்சல் பெயரில், ஃபேஸ்புக்கில் ஒரு திருமண நிச்சயதார்த்த வாழ்த்து கடந்த வாரம் அனுப்பியிருந்தேன். ஓரே நாளில் அதனை நீக்கிவிட்டார், மற்ற எல்லோரின் வாழ்த்தும் (எனக்கு முன்பு அனுப்பியது, எனக்கு பின்பு அனுப்பியது)  இருக்கிறது. ஆனால் விஸ்வகர்மா என்ற அடையாளம் ஏனோ அவருக்கு பிடிக்கவில்லை போலும், நீக்கி விட்டார், என்பதை மிகவும் வேதனையுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம் !
அன்பன்
விஸ்வகரன்

ஜோதிடம் கற்க



Wednesday, January 26, 2011

நோக்கம்

           (3) இலவசமாக ஜாதகம் கணித்து, பலன்    
                மற்றும் ஆலோசனை கூறுதல்
           (4) திருமணப் பொருத்தம் பார்த்தல் இலவசம்
           (5) ஏழைகளுக்கான திருமண உதவிகள்
           (6) திருமண அமைப்புகளின் மூலம் வரன்  
                தேடுதல்
           (7) கல்விக்கான இலவச ஆலோசனை 
                 வழங்கல்
           (8) வேலை வாய்ப்புகளைத் தேடி, இலவச 
                ஆலோசனை வழங்கல்
           (9) வேலையில் சேரும்போது, நேர் காணலில்
           (12) இலவச சிறு தொழிற் பயிற்சி
           (13) மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள்
           (14) ஆதரவற்ற முதியவர்களுக்கான 
                  உதவிகள்
           (15) சமுதாய விழிப்புணர்வு
        


மேலும், தமிழ் விஸ்கர்மா சமூகத்திற்கான, உதவிகளிலும், சமூகப் பணிகளிலும் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்ப்பதுவுமே, நமது கடமையாகும்.

அன்பன்
விஸ்வகரன் 
 
tamizhviswakarma@gmail.com

ஜோதிடம் கற்க